Vedanta - Isavasya Upanishad - Introduction to Slokas 15 - 18; Lighting up to see the light - விளக்கும் விளக்கமும் - ஒரு கண்ணோட்டம்
Preamble
On March 16, 2021, we commenced our journey; our journey to understand Isavasya Upanishad. We started with an innocuous looking verse with a noun, couple of pronouns, few verbs and a particle for emphasis. The Shanthi Sloka conveyed nothing except about “whole”. We even wondered whether Upanishad is the “prattling of an infantile mind” to quote Dr Radhakrishnan, the eminent Indian Philosopher.
However we were curious to learn and started understanding the Slokas word by word, line by line and read the extracts of commentaries by Seers, Saints and the Specially Initiated. 25 Blog posts over the last 9 months, covered 14 of the 18 Slokas.
We traversed through three distinct routes viz., the Jnana Marg, the Karma Marg and the Upasana Marg.
Our understanding may be summarized in a pictorial representation as follows:
Objective of our journey
As we took little steps in these three routes, we were getting clearer idea about the objectives of our journey which can be wonderfully summed up by this epic Sloka.
ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||
1: Om, (O Lord) Keep me not in (the Phenomenal World of) Unreality, but make me go towards the Reality (of Eternal Self),
2: Keep me not in (the Ignorant State of) Darkness, but make me go towards the Light (of Spiritual Knowledge),
3: Keep me not in (the World of) Mortality, but make me go towards the World of Immortality (of Self-Realization),
4: Om, Peace, Peace, Peace.
The final phase:
We now enter into the final phase of our journey (what I termed as the “Hillary Step” in mountaineering language in the previous blog) in our study of Isavasya Upanishad. This is the phase where the Upanishad (Slokas 15-18) advises us to give up all our egocentric actions, deeds and thoughts, get rid of the mortal frame and proceed towards Brahman unobstructed.
In that process, the Upanishad advises us to first seek the grace and help of Sun and Fire , the true representatives of the Ultimate Reality for mortals like us.
The sun, which nourishes the world, is a source of light and energy for the entire solar system and in Vedic philosophy, it represents Brahman. According to our ancients we regard the sun-god as the best visible manifestation of the Absolute. In the sun, there is energy-śakti which is beyond the ken of human understanding, and from the time of the Vedas till to-day we regard the sun as a representation of īśvara. This is a great spiritual secret, which our ordinary mind cannot understand. According to astrology, the sun is conjoined with the ātman, and the moon with the mind. These are facts of experience by the sages and saints.
The Sun is the only visible representative of the Supreme Truth, Divine Light, Brahman. There are only three locations in which one can visualize that Brahman in this earthly world.
As part of the planetary system,
Inside of the heart,
The space between the eyebrows, where the AjnA Cakra is indicated.
The last one gives the esoteric reason why Hinduism insists on a tilak or mark between the eyebrows. Of these three since the Sun (of the planetary system) itself can be visualised as Brahman as compared to the metaphysical locations, the worship of Brahman, the Ultimate, through worship of the Sun, is the easiest to practice. He is the One therefore, that illuminates also from within. Our limited Consciousness has to open up to the infinite Consciousness represented by the Sun.
The last four Slokas/verses from 15 through 18 of the Upanishad are the prayers of the seeker of Brahman who is at the verge of losing his ego-centric identity. These four verses from 15th to 18th make the 15th chapter of Brihad Upanishad also. It is here in this Slokas that a person in deep concentration reaches the stage of non-ego; loss of any concept of individual identity and at this dying moment of ego –identity he prays to God to project His Self-effulgence into him as “I am That.”
தமிழ் விளக்க உரை
"ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்"
என்ற கந்த புராணம் உரைத்த, நம்முள்ளே நின்ற ஆதி அந்தமிலா அந்த மெய்ப்பொருளை உணர்ந்திட, நாம் ஈசனின் உறைவிடம் எனும் இந்த ஈசாவாய்ய உபநிடத்தின் பதினான்கு பண்கள் கூறிய வழிகளைப் படித்திட்டோம் இதுவரை.
இறைநிலையை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான், பற்றற்றான் பற்றினைப் பற்றி பின் பற்று விடற்க முடியும்.
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பாரத்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண் குளிரப் பாரேனோ
என்று ஒரு சித்தர் அருமையான கவியில் விளக்குகிறார். காட்டான் என்றால் தன் இருப்பை உணரக் காட்டிக் கொள்ளாதவன், உருவமற்றவன் என்று ஒரு பொருள். இத்தகைய காட்டான் எனும் உருவமற்ற நிலை, பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்து இறைவனாகவும், ஒவ்வொறு சீவனிலும் அறிவாகவும் உள்ளது. எனவே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும்.
காட்டான் எனும் அறிவு, காட்டான் எனும் பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும் போது, நாம் நாடி பற்று கொண்டு அனுபவித்த வினைப் பதிவுகள் எல்லாம் நாட்டாரென நமை மறித்து நகையும். அந்நாட்டாரை நாம், வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிவிட்டு காட்டானை (அறிவு) ஏறி, காட்டானை (இறைதனை) கண் குளிரப் பாரேனோ என சித்தர் கூறுகிறார்.
அப்படி கண் குளிரப் பார்பதற்கு, முதலில் அருக்கன் கருணை வேண்டும். ஏனெனில்,
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு அல்லனோ
பரிதி வாழ் ஒளியாய் -
என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகிறார்
ஒளியின் உதவியின்றி இவ்வுலகப் பொருள்கள் எதையும் நாம்விளங்கிக்கொள்ள முடியாது.
“விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம்இல்லையேல், விழிகள் விழித்து இளைப்பதல்லால் விளைவொன்றும்இல்லையே”
என்பது திருவருட்பா. எனவே இறைவன் ஜோதிமயமாய் எங்கும் வியாபித்திருக்கிறான் என்பது பெறப்படும். அஞ்ஞான இருளை இறைவன்அருளால் பெறலாகும் அருட்சோதியின் துணைகொண்டே நீக்குதல் இயலும்.
இதனையே, திருமூலர் திருமந்திரம் ஏழாவது தந்திரத்தில் #1818. விளக்கில் விளங்கும் என்று கூறுகிறார்.
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.ஞானம் என்ற விளக்கை ஏற்றுங்கள். எல்லையற்றத் தூய பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். அந்த எல்லையற்ற இறைவன் அண்மையில் நமக்குத் தொல்லை தரும் துன்பங்களும் வேதனைகளும் மறைந்து போய்விடும். ஒளி விளக்காகிய இறைவனை விளக்கும், திரு விளக்காகிய மெய் ஞானத்தை அடைந்தவர் தாமே அந்தச் சிவ ஒளியுடன் சீவ ஒளியாகக் கலந்து நிற்பார்.
முழுமுதற்கடவுளைக் காண, மும்மலம் நீக்கி முடிவுப்பயணமேற்கும் அடியார் அருட்கண் பெற்றிட வேண்டும். ஏனெனில்
அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா;
அருட்கண் உளோர்க்கு எதிர்தோன்றும் அரனே
அருட்கண்ணி னோர்க்கு இங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்கு எங்கும் சீரொளி ஆமே. - திருமந்திரம் 1808
அருட்கண் பெற்றிட பரம்பொருளின் வடிவாம் பரஞ்ஜோதியின் அருள் வேண்டும். இந்த உபநிடத்தின் அடுத்த நான்கு பண்கள் (15-18) இவ்வேண்டுதலின் பிரதிபலிப்பே.
We will see them in the subsequent blogs.
🔥🙏