Vedanta - Knowledge - Sarvam Brahma Mayam - Īśāvāsya upaniṣad - Sloka 1
ஈசனின் உறைவிடம் - பண் 1- இவை அனைத்தும் இறைவனே
Sloka 1:
ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् ।
तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम् ॥ १ ॥
īśāvāsyamidaṃ sarvaṃ yatkiñca jagatyāṃ jagat |
tena tyaktena bhuñjīthā mā gṛdhaḥ kasya sviddhanam || 1 ||
அனைத்து அசைவிலும் அசைவிலா அனைத்திலும் ஈசனே.
அனைத்துக்கும் சொந்தம் அவன் ஒருவனே, ஆதலால்
அவா அறுத்து அகம் துறந்து ஆனந்த நிலை அடைவாய்…. 1
In this changing world everything is subject to change, yet everything is covered by the Lord. Practice renunciation and be strong in the consciousness of the Self. Do not run after anyone's wealth. [I]
Excerpts from the commentaries:
This world and everything in it, is constantly changing. But that which sustains it is never changing. It is always the same. That is the Ultimate Reality – Brahman - The Lord. On Him everything rests. Realize that you and Brahman are one and the same. To attain this knowledge is the goal of life. The world then cannot taint you. Think of yourself as Brahman, as Pure Consciousness. Think intensely and constantly in this way. The attachment you now have to the world will then go.
But how can you attain the knowledge of Brahman? You can attain it by the practice of renunciation. You have to keep reminding yourself that the world, with all its allurements, is not real that is, it is not real in the sense that it is transitory. Only Brahman is real because it is imperishable. You must renounce this world and concentrate on Brahman. You should never run after things that are ephemeral. Never covet someone else's wealth, and never become attached to your own wealth. To one who knows that this world is transitory, wealth is not wealth and any form of sense pleasure is repugnant. You must be concerned only with Brahman become steeped in Brahman. Brahman alone is real and you are that Brahman. Nurture this consciousness and become oblivious to everything else and you will attain the Ultimate Happiness that you are looking for
திருக்குறளும் திரை இசையும் தரும் விளக்கம்
நாம் திரை இசையிலே விரும்பிக் கேட்கும் பாடல்களிலேயே இப் பண்ணின் கருத்தை அறியலாம். ‘அசையும் பொருளில் இசையாக, எதிலும் இயங்கும் இயக்கமாக, இல்லாததொன்றில்லை ‘எல்லாமும் நான்’ என்று சொல்லாமல் சொல்லி வைத்து, புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி புவியாகி வாழ வைப்பவனே’ கடவுள்/இறைவன்.
நாடகமே இந்த உலகம் ஆடுவதோ பொம்மலாட்டம், உலகே மாயம் வாழ்வே மாயம் என்றெல்லாம் திரையிசையில் கேட்கிறோம். நிலையாமை எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் இதனையே
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு’..... என்றும்
‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.’ என்றும் கூறுகிறார்.
ஆதலினால் நமக்கு மெய்யுணர்தல் மிகவும் முக்கியமான குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
என்பதை உணர வேண்டும். அதற்கு பற்று விடுதல் அவசியம். இதனையே திருவள்ளுவர்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
எனத் தெளிவுபடுத்துகிறார் துறவு எனும் அதிகாரத்தில். அதற்கு நாம்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
என்றுணர்ந்து கள்ளாமையின் கருத்தறிந்து முதற்றே உலகான ஆதி பகவனை, இருள்சேர் இருவினையும் சேரா இறைவனைத் துதித்து, அவனின்று ஓர் அணுவும் அசையாது என்றுணர்ந்து ஆசை தவிர்த்து தவ வழியில் நடத்தல் வேண்டும். இதுவே இப் பண்ணின் சாரம்.
Here is the link to a composition in Sanskrit by the legendary Sadasiva Brahmendra