அஷ்டாவக்ர கீதை - புத்தக வடிவில்
Ashtavakra Gita in Tamil - Available now as Books
அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களுக்கு விளக்கவுரைகள், புத்தக வடிவில் குறைவு. சமூக வலைத் தடங்களில் பல பெரியோர்கள் தங்களது விளக்கங்களை ஒளி அல்லது ஒலிப் பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.
அடியேனின் ஏட்டறிவு, கீழ்காணும் நூல்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றிலிருந்து.
பகவத் கீதை – தத்துவ விவேசினீ – கீதா பிரஸ்ஸின் விரிவுரை
திருக்குறள்.
திருமந்திரம்.
தாயுமானவர் பாடல்கள்
சுவாமி சின்மயானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரை நூல்,
சுவாமி பரமார்த்தானந்தரின் அஷ்டாவக்ர கீதை விளக்கவுரைகளை தொகுத்து வெளியிடப்பட்ட எழுத்துப் பதிவுகள்,
பகவான் ரமணரின் தமிழாக்கம்,
குருநாதர் சுவாமி ஓம்காரானந்தரின் வேதாந்த சொற்பொழிவுகள்,
பகவான் ரமணரின் உள்ளது நாற்பது
பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான் படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அப்படி எடுத்துக்கொண்ட குறிப்புகளின் தொகுப்பினை புத்தக வடிவத்தில் (இரண்டு பாகங்களாக) வெளியிட்டுள்ளேன்.
முதல் பாகம் ஸ்லோகங்களின் தமிழாக்க முயற்சி.
இரண்டாவது பாகம் விளக்கவுரைகளின் தொகுப்பு.
இந்தப் புத்தகம், உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
“ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவி நான்,
அத்வைதவாஞ்சையதால், அரியகொம்பில்தேனைஇச்சித்தபடிஆகும்”
என்ற தாயுமானவரின் சொல்லே எனது நிலை.
ஞான யோகத்தில், அரிய முதல்நிலை மாணவனாம் ஜனகருக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், புத்தக வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.
இந்த புத்தகங்களை நோஷன் பிரஸ் (Notion Press) “அமேஸான் (Amazon) ”, “ப்ளிப்கார்ட் (Flipkart) முதலிய விற்பனை தளங்களிலிருந்து பெறலாம். அதற்கான இணைப்புகள் இதோ:
முதல் பாகம் – ஸ்லோகங்களின் தமிழாக்கம்
இரண்டாம் பாகம் – விளக்கவுரை
இந்த புத்தகம் நிச்சயமாக வேதாந்தத்தின் முன்நிலை மாணவர்களுக்கோ அல்லது கற்றறிந்த பெரியோருக்கோ அல்ல. அறியாமையைனும் இருண்ட ஆழ்வனத்தில், மருண்டு அலையும் என்போன்ற சிறியோருக்கு, மின்மினிப்புச்சியின் ஒளியென உதவும் முயற்சியே இந்த புத்தகம்.
இந்த புத்தகங்களின் விற்பனையில் வரும் ஈட்டு அனைத்தும் என்னுடையது அல்ல. அது இறை பணிக்கே என்பது எனது உறுதிமொழி.
சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!