Ashtavakra Gita - Sloka 1.7 - The Global “I”.
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.7 - சுடர் உதயம்
Sloka
एको द्रष्टाऽसि सर्वस्य मुक्तप्रायोऽसि सर्वदा ।
अयमेव हि ते बन्धो द्रष्टारं पश्यसीतरम् ॥ ७ ॥
eko draṣṭā'si sarvasya muktaprāyo'si sarvadā |
ayameva hi te bandho draṣṭāraṃ paśyasītaram
Meaning
“You are the one witness of everything, and are always totally free. The cause of your bondage is that you see the witness as something other than this.“
Explanation
I am reminded of Acharya Vinobha Bhave’s notes on Bhagwad Gita (written from the jail) - a very routine rural practice in our country.
In our villages and many in the urban areas too, there is an early morning pryaer routine/practice that exists even today; upon waking up in the morning, people rub both their palms and place them over their closed eyes, then they open their eyes and look at their palms. They then fold the hands in the form of a prayer (Namasthe). This they do before getting up and commencing their activities for the day.
“ Everything that I see is in my hands. Pl help me God to realise this” is the powerful message that is conveyed in this simple routine.
Sage Ashtavakra provides a Vedantic explanation for this routine.
“See yourself in everything and see everything in you. You are the one Seer of all”.
Sage Ashtavakra earlier told Janaka that “you are essentially “Cit Rupan”, “you are not the body or the mind and hence get rid of all attachments to them (Sloka 3, 4, 6) and also gave him an idea of what he is not (Sloka 5)
Now in this Sloka, he says ‘You are ever free. Unfortunately you are seeing yourself as something different. That causes troubles. That’s the source of “bondage”.
When I am awake, I see the world. Here my mind acts as a tool for me. It helps to see the world. I see the world in my dream state too. Here my mind is an object to me as the world. In both these examples we can compare the mind to a magnifying glass. It can be used as a tool to see the world; It can also be viewed as an object. In both cases “I” use it. Anything I use is not “I”. “I” am different from both the object and the instrument.
Thus, dualistically, directly I experience the mind (as an object) and see the world through the mind (as a tool). However, “I”am not dual. "I" am the witness of both views. The free all-seeing Global “I”.
As a core message, the Sage is urging Janaka to stay focused on the two founding principles of Brahman viz “Sat” and “Cit”, (“Existence” and “Consciousness”).
Note: An overview of the concept of Sat Cit Ananda was provided in the Introduction to Sloka 3 as a separate Newsletter
We will study the next Sloka ASAP. Until then…….
ஸ்லோகம் 7 - சுடர் உதயம்
ஸ்லோகம்
யேகோ த்3ரஷ்டாஸி ஸர்வஸ்ய முக்தப்ராயோஸி ஸர்வதா3!
அயமேவ ஹி தே ப3ந்தோ4 த்3ரஷ்டாரம் பஷ்யஸீதரம்!
தமிழாக்கம்
அனைத்தையும் காணும் நீ என்றும் சுதந்திரம்!
உனை நீ காணாதது ஒன்றே உன் பந்தம்!!
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில் “இருத்தல் (being), அறிதல் (knowing)” என்ற இரண்டு முக்கியமான சொற்களின் தத்துவ விளக்கத்தை கோடிட்டு காட்டுகிறார் முனிவர்.
இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே!
இருத்தல், அறிதல் என்ற இரண்டு தத்துவங்களும் உன்னுள்ளேதான். அதனை நீ அறிந்தால் நீ காணாதது என்று ஒன்றும் இல்லை; உனக்கு என்றும் சுதந்திரம். அதனின் அறியாமைதான் உனக்கு சம்சாரம் எனும் பந்தம்; பிறவிப்பிணி என்கிறார் முனிவர்.
பகவத் கீதை பற்றிய ஆச்சார்யா வினோபா பாவேயின் குறிப்புகள் (சிறையிலிருந்து எழுதப்பட்டது) எனக்கு நினைவிற்கு வருகின்றன - இது நம் நாட்டில் மிகவும் வழக்கமான கிராமப்புற நடைமுறையைப் பற்றியது.
நமது கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பலவற்றிலும், இன்றும் கூட இருக்கும் ஒரு அதிகாலை இறைவணக்க வழக்கம் உள்ளது; காலையில் எழுந்ததும், மக்கள் தங்கள் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து, மூடிய கண்களுக்கு மேல் வைத்து, கண்களைத் திறந்து, உள்ளங்கைகளைப் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பிரார்த்தனை (நமஸ்காரம்) வடிவத்தில் கைகளை கூப்புகிறார்கள். பின்அவர்கள் எழுந்து அன்றைய தினம் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்குவர்.
"நான் காணும் அனைத்தும் என் கையில்தான் உள்ளது. இதை உணர கடவுளே எனக்கு உதவுவாயாக”
என்பது இந்த எளிய நடைமுறையில் சொல்லப்படும் சக்திவாய்ந்த செய்தி.
அஷ்டவக்ர முனிவர் இந்த வழக்கத்திற்கு ஒரு வேத விளக்கத்தை அளிக்கிறார்.
“எல்லாவற்றிலும் உன்னையே பார்,
உன்னில், உள்ள அனைத்தையும் பார்.
அனைவரையும் காணும் சாட்சி நீ ஒருவனே”.
அஷ்டாவக்ர முனிவர் முன்பு ஜனகரிடம், "நீங்கள் அடிப்படையில் "சித் ரூபன்", "நீங்கள் உடலோ அல்லது மனமோ அல்ல, எனவே அவைகளுடனான அனைத்துப் பற்றுகளிலிருந்தும் விடுபடுங்கள் (ஸ்லோகம் 3, 4, 6) மேலும் அவர் யாராக இல்லை என்பதைப் பற்றிய யோசனையையும் அவருக்கு வழங்கினார் (ஸ்லோகம் 5).
இப்போது இந்த ஸ்லோகத்தில்,
‘நீங்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் உங்களை வித்தியாசமாக பார்க்கிறீர்கள். அது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதுதான் தளை எனும் பந்தங்களின் ஆதாரம்.
உலகத்தை விழிப்பு நிலையில் நான் காண்கிறேன். இங்கு என் மனம் எனக்கு ஒரு கருவியாக செயல்படுகிறது. உலகைப் பார்க்க உதவுகிறது. நான் உலகத்தை என் கனவு நிலையில் காண்கிறேன். இங்கே என் மனம் உலகாக எனக்கு ஒரு பொருள். இந்த இரண்டு உதாரணங்களிலும் மனதை நாம் பூணும் கண்ணாடியுடன்ஒப்பிடலாம். ஒரு கருவியாக உலகைப் பார்க்க அதைப் பயன்படுத்தலாம்; அதை ஒரு பொருளாகவும் பார்க்கலாம்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் “நான்” தான் இதைப் பயன்படுத்துகிறேன். “நான்”, பொருள் மற்றும் கருவி என்ற இரண்டிலிருந்தும் வேறுபட்டவன் என்பதை நினைவில் கொள்
என்பதை உரைக்கும் ஆழமான ஸ்லோகம். ஆக, இருமை வகையாக, நேரடியாக, மனதை அனுபவிக்கின்றேன் மற்றும் மனதின் மூலம் உலகைப் பார்க்கிறேன். எனினும் நான் அவைகள் இரண்டுமேஇல்லை எனும் ஒருமை. இரண்டு பார்வைக்கும் “நான்” தான் சாட்சி. அனைத்தையும் காணும் “நான்” என்றும் சுதந்திரம்!
“விழித்து விழித்து இமைத்தாலும்
சுடர் உதயம் இல்லையேல்,
விழிகள் விழித்து இளைப்பதல்லால்
விளைவொன்றும்இல்லையே”
என்பது திருவருட்பா.
முடிவுரை
திரு. அப்பாதுரை அவர்கள் கடோபநிஷத்தின் சாரத்தை “நசிகேத வெண்பா” என்று வெளியிட்டிருந்தார் வலைதளத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்.
“கதிருங் கணப்பொறியுங் கங்குல் கலையுங்
கதிர்க்குங் கணங்களுங் கங்குல் – கதிநாடிக்
கட்கிலியைக் கண்பெறுங் காலையிற் காரிரியக்
கிட்டுங் ககனக் கனல்”.
கதிரவனும் மின்னலும் இருளே. நிலவும் ஒளிவீசும் விண்மீன்களும் இருளே. தன்னறிவைத் தேடி, எளிதில் புலப்படாத ஆன்மாவை அகத்தே அறியும்வேளையில், அண்டத்தின் இருளகற்றும் ஒளி பிறக்கும். அங்கே சூரியனும் பிரகாசிப்பதில்லை; சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பதில்லை; மின்னல்களும் ஏன் தீயும் பிரகாசிப்பதில்லை. அவன் பிரகாசிக்கும் பொழுதெல்லாம் பிரகாசிக்கின்றன; அவனுடைய ஒளியால் இவை எல்லாமே பிரகாசிக்கின்றன.
உபநிஷத்தின் இந்த உட்கருத்தை தழுவியது முனிவரின் இந்த ஸ்லோகம்.
அடுத்த ஸ்லோகம் அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
God Bless