Ashtavakra Gita - Sloka 1.6 - ID troubles
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.6 - மனதின் மதிப்பீடுகள்
Introduction
As important as the word “Om” is in Spirituality, another word that is equally important is “I”. From the beginning of the human race till today, the human race has not stopped trying to find out the answers to the question “Who am I?” Innumerable ideas, philosophies and theories have been brought out across the planet.
Our focus is on Advaita Vedanta philosophy. So whatever the answer is to this question, we can only accept that answer if it is stated in our Vedas which is the only source to access for valuation. So let's select a very brief answer to this vital question and continue our study.
This is the answer given by Ramana Maharishi a hundred years ago.
‘Jnana is “I” and the nature of jnana is sat-chit-ananda’.
This literally means that Knowledge is “I “ and the nature of that knowledge is pure, blissful existence consciousness.
As long as this consciousness exists within us, it functions in two ways:
As an outward looking “I”, when dealing with the external world, “I” am the one who acts/does.
As an inward looking “I”, when dealing within myself “I” am always the one who experiences/enjoys the results of my action.
A human being , when he interacts with the world outwardly, he as an actor/doer engages in deeds (good and bad). Man cannot escape from these two actions. Similarly, when experiencing inwardly, one cannot escape from the dual experiences of pleasure and pain. The sense of self cannot escape from the opposite and enigmatic duality. This is our daily life of action with associated pains and pleasures.
“Well, I don’t want pains, I want only permanent pleasures; happiness free from trails and tribulations”. This is the yearning for most of us in this Universe.
If we have to find a way out to escape from the trials and tribulations, then we need to first understand clearly as to why this “I” in each one of us is working in two ways (as an Actor/Doer and as an Experiencer/Enjoyer).
If we need to understand that, then we need to understand the following:
Is this (acting/doing and experiencing/enjoying) the nature of this “I”?
If not what is the true nature of our “I”.
Sage Ashtavakra commences his detailed explanation with this Sloka.
Let us study this Sloka.
The Sloka
धर्माधर्मौ सुखं दुःखं मानसानि न ते बिभो ।
न कर्ताऽसि न भोक्ताऽसि मुक्त एवाऽसि सर्वदा ॥ ६ ॥
English Transliteration
dharmādharmau sukhaṃ duḥkhaṃ mānasāni na te bibho |
na kartā'si na bhoktā'si mukta evā'si sarvadā || 6 |
Meaning
“Virtue and vice, happiness and sorrow are all attributes of the mind, not of yourself, O all pervading one! You are neither the “doer” nor the “enjoyer”. Indeed,you are ever free”.
Swami Chinmayananda
Explanation
“Virtues and vices are estimates of the intellect; Pleasure and pain are evaluations of the mind. Identity with these estimates and evaluations leads to the sense of “doership” and “enjoyership”.
By thus identifying your consciousness with intellect and mind respectively, the senses of doer-experiencer emanate from you, and in their confluence your self-awareness (“ahamkara”) emerges.
You are not the mind and intellect. If you stop identifying with the mind and intellect, this self-awareness is contained and you can stay put in your pure consciousness which is indeed your nature”
is the message that Sage Ashtavakra conveys to King Janaka. (Explanation- Swami Chinmayananda)
This is what the sage conveyed in Sloka 3 to Janaka that “you are Citroopa, the cognitive form of soul. You are nothing but the Consciousness that makes you aware of everything that you perceive using your body, mind and intellect”.
Sloka 6 amplifies Sloka 3.
It is indeed a difficult task to come out of doer and experiencer roles. Divine grace, formal training under a Guru, actions using body, mind and intellect of ours and finally getting rid of everything including those three are the way out. These will be the topics that will be covered in this Ashtavakra Gita.
We will take time to understand these deep concepts and assimilate what we learn. Will see you soon in the next newsletter for the next Sloka. Until then……..
ஸ்லோகம் 6 - மனதின் மதிப்பீடுகள்
முகவுரை
ஆன்மீகத்தில் “ஓம்” என்ற சொல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அத்தனை முக்கியத்துவம் வாயந்த மற்றொரு சொல் “நான்”. நான் என்றால் என்ன அதாவது நான் யார் என்ற கேள்விக்கு மானிட இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை விடைகளை அறிய மனித இனம் முயற்சிகளை விடவில்லை. எண்ணற்ற கருத்துக்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் என்று வரைந்து கொண்டே இருக்கின்றனர். நமது கவனம் அத்வைத வேதாந்த தத்துவங்கள் மேல். எனவே இந்த கேள்விக்கு எத்தகைய பதிலாக இருந்தாலும், அது நமது மறைகளில் கூறப்பட்டிருந்தால்தான் அந்த பதிலை ஏற்க முடியும். எனவே இந்தக் கேள்விக்கு மிகவும் சுருக்கமான ஒரு பதிலை எடுத்துக் கொண்டு, நமது படிப்பதனைத் தொடருவோம்.
நூறு ஆண்டுகளுக்கு முன் ரமண மஹரிஷி அளித்த பதில் இது.
ஞானம் "நான்" !
ஞானத்தின் தன்மை சத் -சித்-ஆனந்த !!
பகவான் ரமண மஹரிஷி
ஞானம் என்பது தூய, பேரின்ப, இருப்பணர்வு (“சத் சித் ஆனந்த”). இந்த “நான்” எனும் உணர்வு நம்முள் இருக்கும் வரை, அது இருவகைகளில் செயல்படுகிறது. அதாவது,
வெளிநோக்கி உலகுடன் உறவாடும்போது, வினை புரிபவன் நான் என்றும் ,
உள்நோக்கி உணரும்போது பலனை அனுபவிப்பவன் நான் என்றும்
செயல்படுகிறது.
அப்படி வெளிநோக்கி உலகுடன் உறவாடும்போது நல்வினைகளையும், தீவினைகளிலும் ஈடுபடுகிறது. இவ்விரு வினைகளிலிருந்து தப்பிக்க முடியாது மனிதனுக்கு. அதுபோல உள்நோக்கி அனுபவிக்கும்போது, இன்பம் துன்பம் என்ற இருவகை அனுபவங்களிலிருந்து தப்பிக்க முடியாது. எதிரும் புதிருமாய் இருக்கும் இருவகைகளிலிருந்து நான் எனும் தன்னுணர்வு தப்ப இயலாது.
இதுதான் நம் அன்றாட வாழ்வு. தப்ப இயலாது என்றால் வேறேதும் வழி உண்டா என்று எழும் நம் கேள்விக்கு பதில், ஏன் இப்படி தன்னுணர்வு இரு வகைகளில் செயல்படுகிறது என்பதை அறிய வேண்டும். அதற்கு, தன்னுணர்வின் இயல்பான வடிவத்தை (ஸ்வய ரூபத்தை) முதலில் அறிய வேண்டும். முனிவர் இந்த ஸ்லோகத்தில் இதனை கோடிட்டு காட்டுகிறார்.
ஸ்லோகம்
த4ர்மா அத4ர்மோ ஸுக2ம் து3க்க2ம் மானஸாநி ந தே விபோ4!
ந கர்த்தாஸி ந போ4க்தாஸி முக்த யேவாஸி ஸர்வதா3!!
தமிழாக்கம்
புண்யபாப இன்பதுன்பம் மனதிற்கே உனக்கல்ல!
வினையனும் வினைப்பலன் நுகர்பவனும் நீ அல்ல!
நீக்கமற நிறையோனே உனக்கு விடுதலை எப்போதும்!!
விளக்கம்
புண்ணியம், பாவம் என்பது புத்தியின் மதிப்பீடுகள்; இன்ப துன்பம் என்பது மனதின் மதிப்பீடுகள். இந்த மதிப்பீடுகளின் அடையாளமே வினையன் (வினைபுரிபவன்), நுகர்பவன் (அனுபவிப்பவன்) “நான்” எனும் தன்னுணர்வு.
இவ்வாறு புத்தியுடனும் மனதுடனும் நம்மை முறையே அடையாளப்படுத்திக்கொள்வதால், புரிபவன்-அனுபவிப்பவன் என்ற உணர்வுகள் நம்மிடமிருந்து வெளியாகி, அவைகளின் சங்கமத்தில் நம் தன்னுணர்வு வெளிப்படுகிறது. மனம், புத்தி இவைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை தடுத்தி நிறுத்தினால் இந்த தன்னுணர்வு அடங்கி, அது தூய உணர்வாகும்.
இந்த நிலைதான் முந்தைய ஸ்லோகத்தில் கூறிய சித் எனும் உள்ளுணர்வில்உறைந்திடும் நிலை.
முடிவுரை
இந்த அறிவுரையைத்தான் ஆதி சங்கரர், நிர்வாண சதகத்தில்,
ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந து3க்க2ம்
ந மந்த்ரோ ந தீர்த்த2ம் ந வேதா3 ந யக்ஞஹ
அஹம் போ4ஜனம் நைவ போ4ஜ்யம் ந போ4க்தா
சிதா3னந்த3 ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்
பாவ புண்ணியம் இன்ப துன்பம் எனக்கில்லை
பாசுரமும் திருத்தலமும் மறைநூலும் வேள்வியும் எனக்கில்லை
பலன் நுகர்வும், நுகர்வதும், நுகர்வோனும் நானில்லை
உள்உணர்வின் பேரின்ப வடிவான சிவமே யான் சிவமே யான்!!
ஆதி சங்கராச்சார்யா - நிர்வாண சதகம்
என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். “கர்த்தா, போக்தா” என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பாத்திரங்களிலிருந்து நாம் வெளிவருவது என்பது சுலபமல்ல. இதனைப் பற்றிய வழிமுறைகள், விளக்கங்கள், அறிவுரைகள் எல்லாம் அடங்கியதே இந்த அஷ்டாவக்ர கீதை. நமது கல்வியைத் தொடர்வோம்.
அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம். அதுவரை……
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
God Bless