Ashtavakra Gita - Sloka 1.5 - Erroneous thoughts
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 5 - தவறான சிந்தனைகள்
Introduction
“How can knowledge (Jnana) be acquired? How can Liberation (Mukti) come ? How is renunciation achieved?”
These were the questions posed by the student, King Janaka to his Guru, Sage Ashtavakra. In response sage Ashtavakra lays down two essential plans to succeed in spiritual journey:
Reject the objects of the senses as poison.
Seek forgiveness, straightforwardness,kindness, cheerfulness and truth as nectar.
Sage Ashtavakra then encourages Rajarishi Janaka to elevate his thinking to the next higher level by outlining two important principles, viz., the Pancha Boothas (The five elements of Nature) and the concept of Cit Rupa, the Pure Consciousness. The Sage then advises Janaka that “You are neither earth, water, fire, air or even ether. Know yourself as “Citrupan”, the Consciousness, the witness”.
Subsequently he triggers further probe by providing an overview of the basic knowledge about oneself which by itself forms the core action strategy for “seeking eternal happiness free from any bondage. “If only you will remain resting in consciousness, seeing yourself as distinct from the body, then even now you will become happy, peaceful and free from bonds” said Ashtavakra.
After setting the vision for his journey, Sage Ashtavakra now comes to the brass tacks at the working level and advises Janaka as to who he is and who is not. Let us examine the Sloka.
Sloka
na tvaṃ viprādiko varṇo nāśramī nākṣagocaraḥ |
asaṅgo'si nirākāro viśvasākṣī sukhī bhava || 5 ||
Meaning
“You do not belong to the Brāhmaṇa or any such other caste. Nor do you belong to any station in life (āśrama). You are not perceivable by the senses. Unattached, formless and ‘witness’ of all you are, be happy.” - Swami Chinmayananda
Explanation
He first emphasizes that in our daily life, we should break the free from the social systems associated with life.
Varna System (conveniently twisted and projected as Caste System by vested interests) refers to a system of classification of the society as per the occupation that one performs commencing from low skills level (motor skills) to high end intellectual skills. Firmly attached to occupational groups called varna (which eventually became caste), we refuse to break free from it. We feel a sense of security in that connection. That sense of security binds us even more.
"Ashrama" refers to the various stages of our existence in life such as child, youth, adult and old age. In today's world, in all these four stages, we all are "damn busy" - restless hustlers; we don’t know or understand as to how time passes. We long for a little more time. As children, we were busy playing, finding hardly any time for playing! In the Teen age we are “justifiably busy” with our sexual orientation and the carnal pleasures associated. A young man worries about how many girlfriends he has, and a young girl worries about how many boyfriends she has behind her. We worry about how many people follow and like us on social media. In old age, we enter the end stages of life. Our focus shifts completely and focuses on the safety/concerns of our possessions, children, grandchildren etc. "We begin to vomit our blossoming memories on whoever we speak to”. There is no time to know the essence and realize the reality. Even if you think you can spare some time, due to lack of training, the mind will refuse to indulge in such thoughts and will rush towards the lame.
Therefore, the sage makes a clarion call to King Janaka to transcend the social systems such as varnas and ashramas and the experiences consumed by the mind in life, contemplate and understand that he is in fact, the ultimate reality, the blissful state where he witnesses without any bonds, affiliations, attractions etc all the forms and formless universes.
We will study the next Sloka ASAP in the next Newsletter. Until then ……..
ஸ்லோகம் 5 - தவறான சிந்தனைகள்
முகவுரை
முக்தி எனும் பேரின்பமுடன் அமைதியான வீடுபேறினை இப்பொழுதே பெற்றிட விழைந்தால்,
பொறிபுலனறி பொருள்தனை நஞ்சென ஒதுக்கிட்டு மன்னித்தல், நேர்மை, கருணை, மகிழ்வு, உண்மைதனை அமிழ்தென நாடி,
பஞ்ச பூதங்கள் நான் இல்லை, அவைகளனைத்தும் ஆத்மாவின் அறிதல் வடிவே என்று அறிந்துணர்ந்து,
உடலை விடுவித்து, பற்றற்று உறைந்திடுவாய் சித்தெனும் உள்ளுணர்வில்.
என்று முந்தையே ஸ்லோகங்களில் ராஜரிஷி ஜனகருக்கு, அஷ்டாவக்ர மஹாமுனி எடுத்துரைத்தார் இதுவரை.
இது ஒரு உயர்நிலை கண்ணோட்ட அறிவுரை, அரச ஞானி ஜனகருக்கு. இனிவரும் ஸ்லோகங்களில் வாழ்வின் அன்றாட நடைமுறையில்,ஜனகர் யாராக/எதுவாக இல்லை, ஜனகர் யார் என்பதை படிப்படியாக விளக்குகிறார்.
ஸ்லோகம்
ந த்வம் விப்ராதி3கோ வர்ணோ ந ஆஸ்ரமீ ந அக்ஷகோ3சர:!
அஸங்கோ3ஸ்ஸி நிராகாரோ விஸ்வ சாக்ஷி ஸுகீ2 ப4வ!!
தமிழாக்கம்
நால்வகை சமூக வகுப்பில்லை நீ!
நால்வகை வாழ்வு நிலையில்லை நீ!
பார்வை போன்ற பொறிபுலனில்லை நீ!
பற்றிலா வடிவமிலா ஒருமையான நீ
பார்தனின் சாட்சியென பேரின்பமாய் இரு!! 1.5
விளக்கம்
நமது அன்றாட வாழ்வில், நம்மைப்பற்றிய தவறான சிந்தனைகளை உடைத்தெறிய வேண்டும் என்று முதலில் எடுத்துரைக்கிறார்.
வர்ணம் என்பது தொழில் சார்ந்த குழுக்களை குறிக்கும். இந்தப் பிரிவுகள், ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள முக்கிய எண்ணப் பதிவுகளெனும் வாசனைகளின் குணங்களை அடிப்படையாகக் கொண்டவை. வர்ணம் என்ற தொழில் குழுக்களுடன் (இதுவே சாதியென காலப்போக்கில் மாறியது) உறுதியாக இணத்துக் கொண்ட நாம், அதனிலிருந்து விடுபட மறுக்கிறாம். அந்த இணைப்பினில் ஒரு பாதுகாப்பினை உணர்கிறோம். அந்த பாதுகாப்புணர்வு நம்மை மேலும் பிணைக்கிறது.
“ஆஸ்ரம” என்பதற்கு வாழும் வாழ்வியல் நிலைகள் என்ற பொருள். மனதின் வெவ்வேறு மனப்பான்மைகளின் வகைப்பாடுகள்; உலகத்துடன் மனதின் வெவ்வேறு உறவுகளைச் சார்ந்தது. ஒரு மனிதன் வாழ்வில் குழந்தை, பாலகன், இளைஞன், முதியவன் என்ற பருவங்களைக் (நிலைகளைக்) கடந்து செல்கிறான். இன்றய காலக் கட்டத்தில் நாம் அனைவரும் ஒரே “பிஸி” - ஒய்விலா பரபரப்பு; நேரம் எப்படி போகிறது என்று தெரிவதே இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்காதா என்ற ஏக்கம். அல்லவா குழந்தைகளாக இருந்தபோது, விளையாட்டிலே பிஸி. இளமை எனும் பூங்காற்றுக் காலத்தில் பாலினத்தில் நாட்டம். இளஞனுக்கு எத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள் என்ற கவலையும், குமரிப் பெண்ணுக்கு, தனக்கு பின்னால் எத்தனை ஆண் நண்பர்கள் சுற்றுகிறார்கள் என்ற கவலை. சமூக ஊடகங்களில் எத்தனை பேர் தன்னைப் பின்பற்றுகிறாரகள், விரும்புகிறார்கள் என்ற கவலை. முதுமையில், வாழ்க்கையின் இறுதி/இறுதிக் கட்டங்களுக்குள் நுழைகிறோம். நமது கவனம் முழுவதுமாக மாறி, நமது உடமைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் போன்றவற்றின் பாதுகாப்பு/கவலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எவரிடத்தில் பேசினாலும், “நமது மலரும் நினைவுகளை அவர்களின் மீது வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறோம்”. பரம்பொருளை அறியவும், மெய்ப்பொருளை உணரவும் நேரமே இல்லை. சிறிது நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்தாலும், பயிற்சியின்மையால், அப்படிப்பட்ட எண்ணங்களில் மனம் ஈடுபட மறுக்கும், நொண்டிச்சாக்குகளை நோக்கி விரையும்.
எனவே, ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்த சத்சித்தெனும் உள்ளுணர்வில் உறைந்து, சமூக அமைப்புகள், வாழ்வின் வழிநிலைகள் இவற்றை கடந்த மனநிலை கொண்டு, பொறி புலனால் நுகரும் அனுபவங்களுக்கப்பால், பந்தங்களேதுமில்லாமல், வடிவமிலா அண்டங்கள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் பேரின்ப நிலையே நீ என்பதை அறிவாயாக என்று தெளிவாக கூறுகிறார் முனிவர்.
முடிவுரை
பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்பவன் நானே
திருமந்திரம்
என்று திருமூலர் கூறியது இந்த ஸ்லோகத்தின் பிரதிபலிப்பு.
உலகின் எந்தப் பொருளும் அதன் தற்காலிகத் தன்மையால் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நிரந்தரமாக இருக்கிறதோ அதுதான் நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும். பரம்பொருள் மட்டுமே நிரந்தரமானது எனவே அந்தப் பரம்பொருளே நீ என்று புரிந்துகொண்டு, நாம் தொடர்ந்து சுயமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தால், அதுவே உலகப் பொருட்களின் மீதான மாயையை போக்கி நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கும்.
அடுத்த அறிவுரை விரைவில்…… அதுவரை
God Bless
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!t