Ashtavakra Gita - Sloka 1.4 - Impermanent Body
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.4 - காயமே இது பொய்யடா!
Introduction
King Janaka, seeking spiritual knowledge from his Guru Sage Ashtavakra, commenced his interactions with a three pronged question viz.
“Teach me this, Oh Lord!
How can knowledge (Jnana) be acquired?
How can Liberation (Mukti) come ?
How is renunciation achieved?”
Sage Ashtavakra, to begin with provided Janaka with a list of do’s and don’t’s to help him focus and followed it up with a statement that nudged Janaka to think as to who he was. Ashtavakra advised “You are not the Panch Maha Boothas; your are indeed the Chitroopa”.
Now in this Sloka he is triggering further probe by providing an overview of the basic knowledge about oneself which by itself forms the core action strategy for “seeking eternal happiness free from any bondage”.
Let us try to understand this Sloka.
Sloka
yadi dehaṃ pṛthakkṛtya citi viśrāmya tiṣṭhasi |
adhunaiva sukhī śānto bandhamukto bhaviṣyasi ||
Meaning
If only you will remain resting in consciousness, seeing yourself as distinct from the body, then even now you will become happy, peaceful and free from bonds.
Explanation
In the opening prayer of “Sundara Kandam”, the legendary Tamil Poet Kamban, draws reference to the core concept of Vedanta.
“Like seeing a non existent snake in the rope under dim light, for people who see themselves (out of ignorance) as their physical body and mental faculties and undergo sufferings as a consequence to that misplaced understanding, Lord Ram is the light who dispels the ignorance surrounding them.”
Sage Ashtavakra takes up this core concept in this Sloka and stresses the need to know and clearly understand that one should not identify themselves with their body-mind-intellect complex (BMI Complex as Swami Chinmayananda puts it).
If one knows and clearly understands this concept and lives by it, one can avoid the perils and pitfalls associated with this life full of bondages. Eternal peace and happiness will then be the state of that individual at once, right here and at that time itself, asserts Ashtavakra.
Three important steps are inherently identified in this Sloka. These are:
Renunciation of the identification of Self with the Body
Stay focussed and fixed in the Consciousness
Detachment
We will now study the core messages, unwritten yet conveyed powerfully through certain words of the Sloka.
“yadi dehaṃ pṛthakkṛtya”
We all know, realise and perfectly understand that we exist. The issue is - we exist as what, is the question. Beginning at the maternity ward in a children’s hospital with the umbilical cord relationship, we first bind us with our bodies. This is quite natural. This attachment slowly, steadily but surely solidifies and we attain the feeling that the body is life itself. We use various materials and processes to grow, refine, protect it. We eat to work, work to eat, seek relaxing environment and comforts and the endeavours never ends, till perhaps the ventilator is pulled out at the geriatric care hospital Intensive Care Unit.
Learned people, poets, saints, sages across the globe in multitude of languages have written, spoken, writing, speaking about the impermanence of BMI complex of ours. We all have read it, spoken about it and experienced it in our families. Despite that never for a moment we internalise that body-mind-intellect complex “owned” by us is impermanent. This is the reality.
This is the core message through the first three words of the Sloka “yadi dehaṃ pṛthakkṛtya”
bandhamukto
We must clearly understand what detachment means. Often, we think of giving up attachment as renouncing family ties, taking asceticism, or running away from the world. In fact, we cannot run away from the world because it is everywhere in one form or another. When we say detachment we are not talking about severance of the objects/matter in the physical/literal sense. We are talking about the dependence on them. To my little knowledge, none of the teachers in Vedanta advise not to have any contact with the world. The world exists for us. They only teach us how to experience. Detachment is having a relationship free from attachment or aversion.
“Hate is a distorted form of attachment. Hence, attachment and aversion (raga and dvesha), are two sides of the same coin. Both represent servitude and dependency. They lead to an unhealthy relationship in which I lose my objectivity to the circumstances of the world; I allow the circumstances and objects around me to determine my happiness. In their association, I value them more than they deserve, and in hatred, I find them worth less than they deserve. So when it is said to be free from attachment, it also means to strive to be free from hatred,”
says Swami Vididatmananda.
One should gradually develop a sense of objectivity by developing peace of mind and freedom from the reactions of likes and dislikes. Detachment is learning to develop an objective sense of the world and deal with the realities of life rather than living in a world defined by how I see it. When we take a ride on a giant roller coaster, we close our eyes with thrill and fear of the unknown as part of the adventure. We don’t realise the loops and the negative “g”s that we pull through. Only when we come out and have an outside view the reality strikes. The detached outside perspective is closer to the reality. We need to develop an “outside the roller coster” view of the world.
This is the core message through the penultimate word of the Sloka bandhamukto.
citi viśrāmya tiṣṭhasi
Why are we finding it difficult to have a detached perspective? It is due to delusion of mind which prevents one from discerning the truth (makes one believe in the reality of worldly objects and to be addicted to the gratification of sensual pleasures). नित्य अनित्य अविवेक: इति मोह: (nitya anitya aviveka: iti moha:). So, a deluded mind superimposes an unjustified value upon the things of the world through Raga-devsha (attachments and aversions) as impurities. A mind under the influence of raga-dvesha is an impure and reactive mind. When something confirms my attachment I get elated and when something contradicts it I get depressed. Elation is the product of raga and depression is the product of dvesha. While I cannot see my raga-dveshas directly, when I find myself reacting I can see the product of these raga dveshas. These reactions could be anger, greed, resentment, repression, sadness etc. A reactive mind is thus an impure mind.
As the mind becomes clear, it slowly becomes free from moha or delusion. As the mind slowly becomes free from this moha it becomes free from raga and dvesha.
To the extent that the mind is pure, it enjoys peace, serenity, and composure, and to the extent that the mind is composed, it enjoys balance or equipoise. Just as water becomes transparent and pure when you remove the dirt from it, so also, as the impure thoughts are removed from the mind, it becomes pure and serene, and we enjoy tranquility of the mind - “niscalatattvam”
When the mind becomes tranquil, it becomes objective. It is then able to understand the purport of the scriptures. Until then, whatever we hear is processed by a mind which is distorted by raga-dveshas. When those distortions are not there, the mind is able to truly appreciate the unfoldment of the vision of the scriptures. When the attachment to raga-dveshas goes, the moha or delusion goes; when the delusion goes, the mind is able to understand clearly what the scriptures reveal about the Ultimate Reality - the intrinsic nature of the Self and not its incidental nature. That is how the knowledge takes place and one slowly gains abidance in that knowledge.
This abidance in the knowledge of the Self is what is conveyed through the words citi viśrāmya tiṣṭhasi
adhunaiva
When this abidance in the knowledge (the aparoksha jnanam i.e. “Aham Brahmaasmi” - the direct knowledge that “ I am the Ultimate Reality”) is experienced, there is freedom even while one is alive. This is the growth that the scriptures present before us, the goal presented by Vedanta. The goal is jivanmuktiH, becoming free even when we are in this body. It is not the mukti or liberation after death, but the liberation or the freedom even while I am here right now. This is what is conveyed through this word adhunaiva.
Very powerful messages conveyed through simple Sanskrit words. Time for us to ponder.
See you soon with Sloka 1.5. Until then ……..
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.4 - காயமே இது பொய்யடா!
முகவுரை
ராஜரிஷி ஜனகரின் முதல் கேள்விக்கு, இரண்டு ஸ்லோகங்கள் வழியாக உயர்நிலை அறிவான சித் அம்சமே நீ என்றும், முக்திக்கு வித்திடும்வாழ்க்கை முறைகளையும் எடுத்துரைத்தார்.
இப்போது, நான்காவது ஸ்லோகத்திலிருந்து “நான்” என்பது எதுவாக இல்லை, எதுவாக இருக்கிறது என்று விளக்கங்கள் அளிக்கிறார்.
அந்திப்பொழுதில், மங்கலான ஒளியி்ல், சாலை ஓரம் நெளிந்து வளைந்து ஏதோ ஒன்று கிடப்பதை காண்கின்றோம். நமக்கு இதயத் துடிப்பு லேசாக ஏறுகிறது. ஒரு வேளை பாம்பாக இருக்குமோ ? எச்சரிக்கையோடு , சற்று மெல்லமாக அடி எடுத்து வைக்கிறோம். அது அசைவது போல ஒரு பிரமை. இன்னும் கொஞ்சம் நெருங்கிய பின் தெரிகிறது, அது பாம்பு அல்ல மாலை என்று. அறிவு தெளியாதபோது தோன்றிய பாம்பு, மறைந்து விட்டது. அறிவு தோன்றிய பின் உண்மை எது என்று தெரிகிறது. அது போல பஞ்ச பூதங்களாலான மறைந்துவிடும் இவ்வுடலை உண்மையென கருதும் நம் அறியாமை, கையில் வில்லேந்திய ராமனைக் கண்டால் விலகும் என்கிறார் கவிச்சக்ரவரத்தி கம்பன் சுந்தர காண்டத்தில்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் - 'கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!'
கவி சக்ரவர்த்தி கம்பன்
கம்பனின் இந்த கடவுள் வாழ்த்தில் அத்வைத வேதாந்தத்தின் அடிப்படை தத்துவம் ஒன்று உள்ளது - பஞ்ச பூதங்களால் ஆகிய உடல் நிலையல்ல, அது அழிவது; உடலில் உறையும் நான் அவ்வுடல் அல்ல என்பது தான் அந்த தத்துவம்.
இந்த தத்துவத்தைத்தான் அஷ்டாவக்ர முனிவர் நான்காவது ஸ்லோகத்தில்கூறுகிறர்.
ஸ்லோகம்
யதி3 தே3ஹம் ப்ருத2க்ருத்ய சிதி விஸ்ராம்ய திஷ்ட2ஸி
அது4நைவ ஸுகீ2 ஸாந்த: ப3ந்த4முக்தோ ப4விஷ்யஸி
தமிழாக்கம்
விடுவிப்பாய் உடலிலிருந்து உன்னை
உறைந்திடுவாய் சித்தெனும் உள்ளுணர்வில்!
பற்றற்று இப்பொழுதே பெற்றிடுவாய்
பேரின்பமுடன் அமைதியான வீடுபேறு!!
விளக்கம்
முதலில், “நான்” நானிருக்கும் உடல் அல்ல என்பதை அறிந்துணர்ந்து உடலிலிருந்து உன்னை விடுவித்து உள்ளுணர்வில் உறைந்திடு என்கிறார் முனிவர். பின்னர், பந்தங்களற்ற வீடுபேறுடன் மகிழ்வு நிறை அமைதி கிட்டும் உனக்கு என்று அந்த மனநிலையின் பலனை எடுத்துரைக்கிறார் முனி.
ஆன்மீகத்தில், வீடுபேறு எனும் முக்தி என்பதனை இரண்டு கண்ணோட்டத்தில்காணலாம்.
மேவிய உடலிலிருந்து உயிர் பிரியும் மரணத்தின் பின் வரும் விடுதலை நிலை (விதேஹ முக்தி),
உற்ற தேகத்தில் உயிர் இருந்தும், உடலை விடுத்த விடுதலை நிலை (ஜீவன்முக்தி).
இந்த ஸ்லோகத்தில் முனிவர் கோடிட்டு காட்டுவது ஜீவன் முக்தியை என சுவாமி சின்மயானந்தா விளக்குகிறார்.
இந்த அறிவுரையில் ஜீவன் முக்தி பெற நாம் செய்ய வேண்டிய மூன்று முக்கிய கடமைகளை கோடிட்டு காட்டுகிறார் அஷ்டாவக்ர முனிவர். இவற்றை நாம் விவரமாக அறிந்து கொள்ள வேண்டும். இவைகள் முறையே:
உடலை விடுத்தல்
உள்ளணர்வில் உறைதல்
பந்தங்கள் அறுத்தல்
உடலை விடுத்தல் - தே3ஹம் ப்ருத2க்ருத்ய
“நான்” இருக்கிறேன் என்று நன்குணர்ந்த நாம், “நான்” என்னவாக இருக்கிறேன் என்பதில்தான் குழப்பம் அடைகிறோம். மகப்பேறு மருத்துவகத்தில் தொப்புள் கொடி உறவுடன் தொடங்கிய நாம், முதலில் நம்மை நமது உடலுடன் பிண்ணி இணைக்கிறோம். இது இயல்பு. பின் வளர்ச்சியின் அங்கமாக அது படிப்படியாக உறுதியாகி, உடலே உயிர் எனும் உணர்வினை அடைகிறோம். அதனை வளர்க்க, மெருகுபடுத்த, காக்க, விதவிதமான பொருட்கள், செயல்முறைகள் என்ற பலவற்றை உபயோகப்படுத்துகிறோம். காலன் விதித்திட்ட வேளை வந்தால் முதியோர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக்காற்றுக்குழாய் அகற்றப்பட்டு செத்து மடிகிறோம். செத்தபின், “இன்னாரின் பூத உடல், இயற்கை எய்தினார், ஆத்மா சாந்தி அடையட்டும்” என்றெல்லாம் இருப்பவர்கள் இல்லாதவர்களைப்பற்றி கூறுகிறார்கள். நாம்இவ்வுலகில் வந்திறங்கியது எதற்காக, வந்து புரிந்தது என்ன என்று அறியாமல்கூட செல்கிறோம். இருக்கும் போது, நாம் இருக்கும் காயம் ஒரு பொய், இந்த யாக்கை நிலையாதது என்றெல்லாம் நொடிப்பொழுதும் உள்நோக்கி ஆய்ந்ததில்லை. இதுதான் யதார்த்தம்.
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்,
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்,
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி,
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே’
திருமந்திரம்
என்று திருமூலரும்
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)
திருக்குறள்
என்று திருவள்ளுவரும் கூறிய யாக்கை நிலையாமையை உணராது வாழ்வதினால் நிலையான பேரின்பமெனும் முக்தி நமக்கில்லை என்பதை நன்கறிந்துணர்ந்த உணர்வினை இயல்புணர்வாக நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இது தான் “யதி3 தே3ஹம் ப்ருத2க்ருத்ய” என்ற சொற்றொடரின் உட்கருத்து.
பற்று அறுத்தல்- ப3ந்த4 முக்த:
பற்றறுத்தல் அல்லது பற்றின்மை என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலும், பற்றுதலைக் கைவிடுவது என்பது குடும்பத்துடனான தொடர்பைக் கைவிடுவது, சந்நியாசம் வாங்குவது அல்லது உலகத்தை விட்டு ஓடுவது என்றெல்லாம் நினைப்போம் நாம். உண்மையில், நாம் உலகத்தை விட்டு ஓட முடியாது, ஏனென்றால் அது எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளது. எனவே, உலகத்தின் பௌதிகப் பொருட்களை அல்ல, அவற்றைச் சார்ந்திருப்பதை விட்டுவிட வேண்டும். பற்றின்மையை புலன் பொருள்கள் அல்லது உலகின் வெறுப்பு என்று தவறாக எண்ணக்கூடாது. உலகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆசிரியர்கள் அறிவுரைப்பதில்லை. உலகம் நம் இன்பத்திற்காகவே உள்ளது; விஷயங்களை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டுமே அவை நமக்கு கற்பிக்கின்றன. இங்கே இன்பம் என்பது, சார்பு அல்லது தேவை, இணைப்பினைக் குறிக்கும். இந்த இணைப்பு அல்லது வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு உறவைக் கொண்டிருப்பதே பற்றின்மை.
“வெறுப்பு என்பது இணைப்பின் சிதைந்த வடிவமே. எனவே, பற்றுதல் மற்றும் வெறுப்பு (ராக மற்றும் த்வேஷ), ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டும் அடிமைத்தனத்தையும் சார்பு நிலையையும் குறிக்கின்றன. அவை ஆரோக்கியமற்ற உறவுக்கு இட்டுச் செல்கின்றன, அதில் நான் உலகின் சூழ்நிலைகளுக்கு எனது புறநிலையை இழக்கிறேன்; என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் பொருள்களால் என் மகிழ்ச்சியைத் தீர்மானிக்க அனுமதிக்கிறேன். அவைகளின் இணைப்பில், நான் அவைகளுக்கு அதை விட அதிக மதிப்பை விதிக்கிறேன், வெறுப்பில், அதற்கு தகுதியானதை விடகுறைவான மதிப்பை நான் காண்கிறேன். ஆகவே, பற்றிலிருந்து விடுபடவேண்டும் என்று கூறும்போது, வெறுப்பிலிருந்து விடுபட முற்பட வேண்டும் என்றும் பொருள்படும்” என்கிறார் சுவாமி விதிதாத்மானந்தா.
மெதுவாக மனதின் அமைதியையும் மேற்கூறிய விருப்பு வெறுப்புகளின் எதிர்வினைகளிலிருந்து சுதந்திரத்தையும் வளர்த்துக் கொண்டு புறநிலை உணர்வை வளர்த்திட வேண்டும். நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதன் மூலம் வரையறுக்கப்பட்ட உலகில் வாழ்வதை விட, உலகத்தைப் பற்றிய ஒரு புறநிலைஉணர்வை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கையாளவும் கற்றுக்கொள்வதே பற்றின்மை. ஒரு ராட்சத ரோலர் கோஸ்டரில் இருந்து சுற்றும் போது எப்படியெல்லாம் சுற்றினோம் என்ற விவரமறியோம்; மனதில் பயம் கலந்த பீதியிடன் கண்ணை மூடிக்கொள்கிறோம். அந்த சுற்றுகளிலிருந்து வெளி வந்தவுடன்தான் எப்படியெல்லாம் சுழன்றோம் என்ற உண்மையை அறிகிறோம். இதுதான் இந்த புற நிலைக்கு ஒரு ஒப்பு.
உறைந்திடுவாய் சித்தெனும் உள்ளுணர்வில்! இப்பொழுதே பெற்றிடுவாய் பேரின்பமுடன் அமைதியான வீடுபேறு! - சிதி விஸ்ராம்ய திஷ்ட2ஸி சுகீ2 ஸாந்த:
பற்றின்மையால், தூய்மையற்ற மனம் கலங்கிய நீர் தெளிவது போல, இருமைவகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டு, தெளிவாகும் போது, அது மெதுவாக மோகத்திலிருந்து அல்லது மாயையிலிருந்து விடுபடுகிறது. மனம் மெதுவாகஇந்த மோகத்திலிருந்து விடுபடும்போது அது ராக த்வேஷத்திலிருந்து விடுபடுகிறது. மனம் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது அமைதியை அனுபவிக்கிறது, மேலும் மனம் ஒருங்கிணைக்கப்படும் அளவிற்கு, அது சமநிலையை அனுபவிக்கிறது. நீர் எப்படி அழுக்கை அகற்றி தூய்மையானதாக மாறுகிறதோ, அதுபோல், மனதிலிருந்து அசுத்தமான எண்ணங்கள் நீங்கி, தூய்மையாகவும், சாந்தமாகவும் மாறி, மன அமைதியை அனுபவிக்கிறோம்
மனம் அமைதியடையும் போது, அது புறநிலையாகிறது. (ராட்சத ரோலர் கோஸ்டரில் இருந்துகொண்டு வெளி வந்த நிலை); அப்போதுதான் மறைகூறும்பொருளை புரிந்து கொள்ள முடிகிறது. அதுவரை, நாம் எதைக் கேட்டாலும் ராக-த்வேஷங்களால் சிதைக்கப்பட்ட மனத்தால் செயலாக்கப்படுகிறது. அந்த திரிபுகள் இல்லாதபோது, வேதத்தின் தரிசனம் வெளிப்படுவதை மனத்தால் உண்மையாகப் பாராட்ட முடிகிறது. ராக-த்வேஷங்களின் மீதான பற்று போகும்போது, மோகம் அல்லது மாயை போய்விடும்.
மாயை விலகும் போது, பரம் பொருளான இறுதி யதார்த்தத்தைப் பற்றி வேதங்கள் என்ன வெளிப்படுத்துகின்றன என்பதை மனம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது நமது உடலை மேவிய உயிர் எனும் நிழல், உணர்வான தன்னை உள்ளார்ந்த இயல்பு (நிஜம்) என்றும், தற்செயலான தன்மை (நிழல்) அல்ல என்றும் புரியத் தொடங்கும் பகுத்தறிவு வளர்கிறது. இப்படி பகுத்தறிவதற்கு முன், நிழல் தன்னை நிஜமாக உணர்கிறது (உடல், மன, புத்தி வளாகமே நான் என்ற உணர்வு). பகுத்தறிவில் மெல்ல மெல்ல நிலைபெறும் போது, அந்த நிழல் நிஜமாகி, நிழல் மறைகிறது.
இப்பொழுதே - அது4நைவ
பகுத்தறிவில் நிலைத்திருப்பது என்பது, சத் சித் ஆனந்தமே நான், நானே அவன் என்ற நேரடி அறிவினை (அபரோக்ஷ ஞானம் அதாவது “அஹம் பிரம்மாஸ்மி”) அனுபவிப்பது.
அப்படி அனுபவிக்கும் போது, ஒருவர் உயிருடன் இருக்கும்போது கூட (அதாவது, நம்முடைய அன்றாட வாழ்வில், உடலும், உடல் சாரந்த தண்ணுணர்வால் வரும் வினைகளைப் புரியும் உயிராக), அவ்வினைகள் புரியும்“உயிரான நான்” அவையில்லை, அவைகளனைத்தும் நிழலே, தான் நிஜமான சச்சிதானந்தமே என்ற உள்ளுணர்வு ஒன்று மட்டுமே இருக்கும் பூரண சுதந்திரநிலையே ஜீவன் முக்தி நிலை.
“நாடி அடங்குமுன் நுட்பத்தை உள்ளகப்
பாடியிற் கண்டுப் பெறவேண்டும் - நேடியவர்
தீயிற் கலந்ததும் தீயாம்போல் தன்னறிவால்
வீயிற் புலம்பெறு வார்”.
கடோபநிஷத் - ஒரு கவிஞரின் தமிழாக்கம்
உயிர்மூச்சு இருக்கையிலே, மகத்தான ஆன்மாவை உள்மனதுள் தேடி அறியவேண்டும். குறிக்கோளோடுத் தன்னறிவைத் தேடியறிந்தவர்கள், தீயிலிட்டவை தீயாகிக் கலப்பது போல், ஆன்மாவுடன் கலந்துத் தாமும் பிறப்பிறப்பற்ற மேன்மை அடைகிறார்கள் என்று எமதர்மராஜன், சிறுவன் நசிகேதுக்கு, கடோபநிஷத்தில் கூறியதும் இந்த ஜீவன் முக்தி நிலையின் உயர்வினையே.
இவ்வாறு முக்தியடைந்தவருக்கு (எல்லா உயிர்களும் தானே என்றுஉணர்ந்தவர்), அவருக்கு இரண்டாவது இல்லாததால் மாயையோ துக்கமோஇல்லை. ஜீவன்முக்தா, பேரின்பமான பிரம்மத்தில் அசையாத மனத்துடன் தங்கியிருக்கிறது. அவர் மனதின் அனைத்து மாற்றங்களிலிருந்தும் விடுபட்டவர். அவரது இதயம் இமயமலைப் பனி அல்லது படிகத்தைப் போன்று தூய்மையானது. அவர் வேறுபாடுகளிலிருந்து விடுபட்டவர்.
முடிவுரை
நிஸ்ஸங் கத்வம் - பற்றின்மை, நிர்மோ ஹத்வம் - மருட்சி இன்மை, நிஸ்சலதத்வம் - மனநிலை அமைதி, ஜீவன் முக்தி - வாழ்வில் வீடுபேறு என்ற இந்த தத்துவங்களை ஸத்ஸங்கம் எனும் நல்லோர் இணக்கத்துடன் இனைத்து ஆதிசங்கராச்சார்யர் காசி மாநகரில் நம் அனைவருக்கும் வழங்கிய அறிவுரைதனை நினைவு கூற வேண்டும்.
ஸத்ஸங்க3த்வே நிஸ்ஸங்க3த்வம்
நிஸ்ஸங்க3த்வே நிர்மோஹத்வம் |
நிர்மோஹத்வே நிச்’சல தத்வம்
நிச்’சல தத்வே ஜீவன் முக்தி: ||
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம்
நல்லோர் இணக்கம் பற்றை விலக்கும், பற்றை விலக்கினால் மருட்சி இல்லை. மருட்சி இலதால் மனநிலை அமைதி; மனநிலை அமைதியால் வாழ்வில் முக்தி. இந்த அறிவுரையின் சாரமே அஷ்டாவக்ர முனிவரின் இந்த ஸ்லோகம்.
அஷ்டாவக்ர முனிவரின் அடுத்த அறிவுரையை அடுத்த பதிவில் காண்போம். அதுவரை……..
இறையருள் பெருக!
வளமுடன் வாழ்க!
God Bless