Ashtavakra Gita - Sloka 1.3 - Part 2 - Satcitananda
அஷ்டாவக்ர கீதை - ஸ்லோகம் 1.3 -சச்சிதானந்தம்
Introduction
In the Sloka 1.3, Sage Ashtavakra is going to prompt Janaka to elevate his thinking process to the next higher level. First he takes King Janaka to the Cosmos by referring to the Pancha Boothas and then follows it up with a journey deep down inside him, the “svaroopa” of Janaka. We studied an overview of the concept of Pancha Boothas in the previous newsletter.
Sage Ashtavakrav uses a term “chitrupa” in Sloka 3 to describe Janaka’s “svaroopa. . To understand this term, we have to understand a broader term used for Brahman, the Ultimate Reality.
satyam jnAnam anantam brahma (sat chit Ananda)
These three words indicate the nature of brahman. We call it “lakshaNa”, “svaroopa”. .
Let us now try and understand this term “Satchitananda”. This is an integration of three words; sat, chit, ananda. In Sanskrit it means, existence, knowledge and limitlessness respectively. Each word needs a closer look.
Sat
To understand this word let us look at “satyam” (whose root word is “sat”) meaning truth, a word we all are familiar with. “There is a table. I am sure of it. It is “satyam” - quite often we hear such assertive statements. What does this statement implies? It means an object. It means an object of a particular form and name called table. And it also means that table exists. This is the case for every object that we sense and for everything that has a name and form that we sense using our body-mind complex. We say “This is a table, this is a book, this is a rainbow etc”. In all these, the “is-ness” is the existence.
The only common factor in all these is that word “exists” - the “is”, which we always presume and do not make any extra effort to cognise that. So, for a lay man like me, existence is taken as an attribute of the object; existence of an object depends on the name and form.
Now let us visit a gold jewellery showroom. Bracelets, bangles, ear rings, nose rings, chains….all made out of 22 ct gold. In these objects we look at gold in varieties of name and form. We don’t see the existence of gold and take the existence of bracelet, ring etc as the truth and the gold as an attribute. What Vedanta teaches is the opposite; existence of gold is the ONLY truth, basis, substratum for all ornaments and the bracelets and rings are names and forms which have no existence apart from gold.
Vedanta clearly conveys that existence is the basis of all the appearing forms.
That is-ness, that “existence”, is the one and only truth which provides existence to all names and forms. The is-ness is not object specific. The existence in one object is the same as the one enjoyed by other.
“Vedanta says that if we get rid of the name, form and attributes from the objects that we sense, what remains is the pure “is-ness or existence”, free from names and forms and differentiation whatsoever. That is what we call as “Satyam” and that is the nature of Brahman. In fact, all objects borrow their existence from this very satyam. This satyam, is undifferentiated, all pervading, uniform pure existence not limited by name, form and attributes”
Chit
The nearest equivalent word for “Chit” in English is “knowledge”. Dictionary definition of knowledge is “awareness, understanding or information that has been obtained by experience or study and that is either in a person’s mind or possessed by people generally”.
In Vedanta it is not advisable to do direct translation of a Sanskrit word and take it for study. That approach can have serious limitations. We all have knowledge. We are doing all our work by using knowledge. Will that be truly “chit”? Let us examine with examples.
I am walking on the road. A motor vehicle is speeding towards me. Only if I cognise (understand) in my mind that moving object is a vehicle, will I give way to it and move away from it. What happens if it is not understood as a vehicle? I don’t move from my path and pose serious risk to me and the driver. The driver will come to a screeching halt (hopefully) and will yell at me “Are you out of your senses? Do you understand what you have done?” Here, in this situation, seeing and understanding is taken as knowledge. If we do not understand, we call it ignorance. Does it mean that “Chit” is nothing but “Understanding”?
One more example. On a pleasant but pitch dark night I go for a walk with a torch light in my hand. On my way, I flash the torch in a particular direction. I see a man walking ahead. Now I focus the torch on the tree nearby. The man is no more in my knowledge and the tree is now known. Now I focus the torch light towards the sky. What do we see and know? Nothing. The presence of light is only known only if some dust or smoke interferes with the light ray towards the sky. Otherwise, we don't even know that there is light. So, light is visible only when it falls on some object. Similarly, there is knowledge only when there is an object or matter to cognise. The manifestation of knowledge is only when there is an object. Am I right then to say that “That awareness (consciousness - the knowing nature) which manifests only when there is an object to cognise is the Chit”?.
In both the examples, we saw two ways of defining knowledge; the first example gives us an idea that knowledge is cognition or awareness or consciousness; the second one tells us that there is no manifestation of knowledge without an object and ofcouse the knower that is me. So we are looking at a triad - the knower, the known and knowing. Does it mean that “Chit” is nothing but the above triad of the knower, the known and knowing?
The knowledge that we understood from the above examples is the knowledge of the object and involves the triad. If we examine this deeply, this knowledge of an object is limited only to the knowledge of that object. Looking at it differently; the knowledge is the result of the sensory inputs from our sense organs, processed as a thought in the mind after due application of our intellect. Hence, this knowledge which is generated in our body-mind-intellect complex is limited. Apart from the triad referred above, it also involves name and form.
Vedanta says Chit is that awareness where the “name and form” part is removed and is the fundamental basic stratum for the triad of all knower, known and knowing. That Chit is the pure knowledge that is omnipresent and is the jnAnam”.
Anantam
“ananta” is limitless or infinite. Limitlessness of what and where all is the next question that follows. We started with the basic vedic definition that “satyam jnAnam anantam brahma”. Therefore we are discussing limitlessness of Brahman.
All mortals like us have three basic limitations viz., spatial (“desha”), temporal (“kaala”) and by attributes (“vastu”). We are what we are in a defined space, in a defined time with defined attributes. In other words our existence has these three limitations.
Brahman is free from these three limitations. It means that it is omnipresent and all pervading. It means that Brahman is eternal and there is never an end. It means that unlike objects, Brahman is not limited and separated from others on the basis of certain qualities.
“Brahman being the only one, it cannot be separated from any other. There is no other. It is non dual. Brahman is advitIyam.”
Hence, Brahman is ananta implies, Brahman is all pervading, eternal and non dual. It is free from the above mentioned three limitations.
Satchitanandam
satyam jnAnam anantam is sometimes called as sat chit Ananda in the scriptures.
sat, independent eternal existence, provides existence to all names and forms. Whatever existence that we see are all the same “sat” with different names and forms defined by space, time and attributes.
chit , awareness, presupposes any thought in the mind. Mind is rendered capable of generating thoughts due to the mere presence of “chit”, the consciousness. Consciousness gives me objective knowledge when thoughts are generated in the mind. It is present whether one is awake, dreaming or in deep sleep. This consciousness is me.
anantam is limitless. But now we say Brahman is “Anandam”, nature of happiness. How can ananta and Ananda be the same? Let us examine. Whenever I say that I am happy, what do I mean? It means that at that temporal stage I am completely, perfectly satisfied, where there are no inhibitions, no desires and no limits. It is my own self and in those rare moments I experience myself as the form of happiness. It must be clear that Happiness is not something that I experience. I myself is Happiness at that temporal stage. “Happiness” is just a word to describe that state I am in without any limit. The absence of my limitedness is itself the manifestation of my being limitless, in that limitlessness there is no trace of divisions, sadness, etc. This Ananda, infinitude is my nature and herefore at that stage I am limitless Ananta.
Swami Dayananda Saraswathi explains this:
Ānanda has to be Ananta. ”Satyam-jñānam-anantam brahma” is the beginning, the opening in the Taittarēya Brahmānandavalli, which ends with ānanda being equated to ātma in the section “ānanda ātmā, brahma pucchaṁ pratiṣṭhā”. It is svarūpa-ānanda and not vrtti–gata– ānanda. Saccit has nothing to do with vritti. That Saccit is the only thing which exists, therefore it is Ananta, limitless. Ānanda is limitlessness – it has the same meaning of Ananta, limitlessness, wholeness, pūrṇatvam. It cannot be imagined or conceived but it can be communicated, clearly, by negating time-wise, space-wise and object-wise limitations, because it happens to be the self-evident you.
With these basic inputs about sat, chit and Ananda let us get into the study of Sloka 3 in the subsequent newsletter. Until then…..
சச்சிதானந்தம் - ஒரு கண்ணோட்டம்
அறிமுகம்
ஸ்லோகம் 1.3 இல், அஷ்டாவக்ர முனிவர், ஜனகரை தனது சிந்தனை செயல்முறையை அடுத்த உயர் நிலைக்கு உயர்த்தும்படி தூண்டப் போகிறார். முதலில் அவர் பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுவதன் மூலம் மன்னன் ஜனகனை அண்டத்திற்கு அழைத்துச் செல்கிறார், பின்னர் அதைத் தொடர்ந்து தனக்குள் ஆழமான ஒரு பயணத்தை மேற்கொள்ள உதவுகிறார். ஜனகரின் "ஸ்வரூபம்" என்பதை விவரிக்க அவர் "சித்ருபம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தையைப் புரிந்து கொள்ள, நமது மறைகளில் பரம்பொருளான ப்ரம்மனுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பரந்த சொற்றொடரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா (சத் சித் ஆனந்த)
இந்த சொற்றொடர் பிரம்மனின் இலக்கணத்தை (ஸ்வரூபத்தை) குறிக்கின்றன. இது மூன்று சொற்களின் ஒருங்கிணைப்பு - சத், சித், அனந்த; அதாவது இருப்பு, அறிவு, எல்லையிலா என்ற சொற்கள். இப்போது இந்த "சச்சிதானந்தா" என்ற சொல்லை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
சத் - இருப்பு
இந்த வார்த்தையைப் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒரு வார்த்தையான உண்மை என்று பொருள்படும் "சத்யம்" (அதன் மூல வார்த்தை "சத்") என்பதைப் பார்ப்போம். "ஒரு மேசை உள்ளது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன். இது "சத்யம்" - அடிக்கடி இதுபோன்ற உறுதி தரும் அறிக்கைகளை நாம் கேட்கிறோம். இந்த அறிக்கை எதைக் குறிக்கிறது? ஒரு பொருள் இருக்கிறது. இது மேசை எனப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவம் மற்றும் பெயருடைய பொருளைக் குறிக்கிறது. இப்படி நம் உடல்-மன வளாகத்தைப் பயன்படுத்தி நாம் உணரும் ஒவ்வொரு பொருளுக்கும், நாம் உணரும் பெயர் மற்றும் வடிவம் கொண்ட அனைத்திற்கும் இதுதான் நிலை. "இது ஒரு மேசை, இது ஒரு புத்தகம், இது ஒரு வானவில்" என்று நாம் கூறுகிறோம்.
இவை அனைத்திலும் ஒரே பொதுவான காரணி என்னவென்றால், "இருக்கிறது” என்ற நாம் கூறும் “இருப்பு” எனும் தன்மை. இதனை நாம் அனுமானித்துக் கொள்கிறோமே தவிர அத்தன்மை என்ன என்பதை அறிந்துணர எந்த கூடுதல் முயற்சியும் மேற்கொள்வதில்லை. எனவே, என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு, இருப்பு ஒரு பொருளின் பண்பாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது; ஆக, அன்றாட வாழ்வில் ஒரு பொருளின் இருப்பு என பெயர் மற்றும் வடிவத்தைப் பொறுத்தது.
இந்த “இருப்பு” தத்துவத்தைப் புரிந்து கொள்ள வாருங்கள் ஒரு தங்க ஆபரண மாளிகைக்குச் செல்வோம். அங்கே வளையல்கள், தோடுகள், மூக்குத்திகள், ஒட்டியானங்கள், மாலைகள் என்று வித விதமான ஆபரணங்கள் “இருக்கின்றன”. அனைத்தும் 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த பொருட்களில் நாம் தங்கம் இருக்கிறது என்று கூறுகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் நமக்குத் தெரியும் அவை அனைத்தும் தங்கமே. ஆக, தங்கத்தின் இருப்பை, மற்ற பெயர் மற்றும் வடிவத்தின் வகைகளில் பார்க்கிறோம். தங்கத்தின் இருப்பு என்பதை இருப்பதை வளையல், மோதிரம், கொலுசு என்று பெயர்களிலும், வடிவங்களிலும் அறிகிறோம். தங்கத்தை ஒரு இருப்பபாக அறியாமல், பண்கபாக எடுத்துக்கொள்கிறோம். இது அன்றாட நடைமுறை.
வேதாந்தம் போதிப்பது இதற்கு நேர்மாறானது; தங்கத்தின் இருப்பு ஒன்றே உண்மை. அனைத்து ஆபரணங்களுக்கும் அடிப்படையாக, அடித்தளமாக இருப்பது தங்கம் ஒன்றே. அது தான் சத்தியம். மற்றவைகள் எல்லாம், வடிவங்களுடைய பெயர்கள், அவ்வளவுதான்.தோன்றிய அனைத்து வடிவங்களுக்கும் இருப்பே அடிப்படை என்பதை வேதாந்தம் தெளிவாக உணர்த்துகிறது. அந்த இருப்பு எனும் தன்மைதான், அனைத்து பெயர்களுக்கும் வடிவங்களுக்கும் இருப்பை வழங்கும் ஒரே உண்மை. அந்த இருப்பு என்பது பொருள் சார்ந்தது அல்ல .
"நாம் உணரும் பொருட்களிலிருந்து பெயர், வடிவம் மற்றும் பண்புகளை அகற்றிவிட்டால், எஞ்சியிருப்பது பெயர்கள் மற்றும் வடிவங்கள் மற்றும் வேறுபாடுகள் எதுவும் இல்லாத தூய்மையான "இருப்பு " என்று வேதாந்தம் கூறுகிறது. அதைத்தான் “சத்யம்” என்கிறோம் அதுவே பிரம்மத்தின் இயல்பு. உண்மையில், அனைத்து பொருட்களும் இந்த சத்யத்தில் இருந்தே தங்கள் இருப்பை கடன் வாங்குகின்றன. இந்த சத்யம், வேறுபடுத்தப்படாதது, எல்லாவற்றிலும் பரவியிருக்கும், ஒரே மாதிரியான தூய இருப்பு, பெயர், வடிவம் மற்றும் பண்புகளால் வரையறுக்கப்படவில்லை என்கிறது வேதாந்தம்.
ஞானம் - சித் - அறிவு
“சித்’ என்பது தூய உணர்வினைக் குறிக்கும் சொல். இதனை அறியும் தன்மை அல்லது “அறிவு,” என்றும் கூறலாம்.
வேதாந்தத்தில் சமஸ்கிருதச் சொல்லை நேரடியாக மொழிபெயர்த்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அந்த அணுகுமுறை கடுமையான வரம்புகளைக் கொண்டிருக்கலாம். நம் அனைவருக்கும் அறிவு இருக்கிறது. அறிவைப் பயன்படுத்தித்தான் நாம் எல்லா வேலைகளையும் செய்கிறோம். அது உண்மையிலேயே "சித்" ஆகுமா? உதாரணங்களுடன் ஆராய்வோம்.
நான் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு மோட்டார் வாகனம் என்னை நோக்கி வேகமாக வருகிறது. நகரும் பொருள் ஒரு வாகனம் என்பதை நான் என் மனதில் உணர்ந்தால் மட்டுமே, நான் அதற்கு வழிவிட்டு அதிலிருந்து விலகிச் செல்வேன். வாகனம் என்று புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும்? நான் என் பாதையில் இருந்து நகரவில்லை, எனக்கும் டிரைவருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறேன். ஓட்டுனர் சத்தம் போட்டு வந்து என்னை நோக்கி “உனக்கு அறிவில்லையா? நீ என்ன செய்தாய் எனப் புரிகிறதா?” திட்டுவார் அல்லவா. இங்கே, இந்த சூழ்நிலையில், பார்ப்பதும் புரிந்துகொள்வதும் அறிவு என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. புரியவில்லை என்றால் அதை அறியாமை என்கிறோம். அப்படியென்றால் "சித்" என்பது "புரிதல்" என்பதைத் தவிர வேறில்லை என்று அர்த்தமா?
இன்னும் ஒரு உதாரணம். ஒளியிலா இருண்ட இரவில் நான் என் கையில் டார்ச் (கை விளக்கு) லைட்டுடன் நடந்து செல்கிறேன். நான் செல்லும் வழியில், ஒரு குறிப்பிட்ட திசையில் டார்ச்சை ஒளிரச் செய்கிறேன். ஒரு மனிதன் முன்னால் நடப்பதை நான் காண்கிறேன். இப்போது அருகில் உள்ள மரத்தில் டார்ச்சை ஃபோகஸ் செய்கிறேன். மனிதன் இப்போது என் அறிவில் இல்லை, மரம் இப்போது அறியப்படுகிறது. இப்போது நான் டார்ச் லைட்டை வானத்தை நோக்கி செலுத்துகிறேன். நாம் என்ன பார்க்கிறோம் மற்றும் அறிவோம்? ஒன்றுமில்லை. வானத்தை நோக்கிச் செல்லும் ஒளிக் கதிரில் சில தூசியோ புகையோ குறுக்கிட்டால்தான் ஒளியின் இருப்பு தெரியும். மற்றபடி வெளிச்சம் இருப்பது கூட தெரியாது. எனவே, ஒளியானது ஏதேனும் ஒரு பொருளின் மீது படும்போதுதான் தெரியும். அதேபோல, அறிவதற்கு ஒரு பொருள் அல்லது விஷயம் இருக்கும்போதுதான் அறிவு இருக்கும். அது இருக்கும் போது தான் அறிவின் வெளிப்பாடு. "அறிவதற்கான ஒரு பொருள் இருக்கும்போது மட்டுமே வெளிப்படும் அந்த விழிப்புணர்வு (உணர்வு - அறியும் தன்மை) சித்" என்று நான் சொல்வது சரிதானா?.
இரண்டு எடுத்துக்காட்டுகளிலும், அறிவை வரையறுக்கும் இரண்டு வழிகளைக் கண்டோம்; முதல் உதாரணம் அறிவு என்பது அறிவாற்றல் அல்லது விழிப்புணர்வு அல்லது நனவு என்று கூறுகிறது; இரண்டாவது, ஒரு பொருள் இல்லாமல் அறிவின் வெளிப்பாடு இல்லை என்று நமக்குச் சொல்கிறது. எனவே நாம் ஒரு முக்கோணத்தைப் பார்க்கிறோம் - அறிபவர், அறியப்படும் பொருள், அறிதல். அப்படியென்றால் அறிவு என்பது மேற்கூறிய மூவகையைத் தவிர வேறில்லை என்றா பொருள்?
மேற்கூறிய உதாரணங்களிலிருந்து நாம் புரிந்து கொண்ட அறிவு வெறும் பொருள் அல்லது விஷயம் பற்றிய அறிவு என்பதனை மட்டும் உள்ளடக்கியது. இதை ஆழமாக ஆராய்ந்தால், இந்த அறிவு என்பது நமது புலன் உறுப்புகளிலிருந்து வரும் உணர்வு உள்ளீடுகளின் விளைவாகும்; நமது புத்தியை முறையாகப் பயன்படுத்தி, பிறகு மனதில் ஒரு எண்ணமாக செயலாக்கப்படுகிறது. எனவே, நமது உடல்-மன-புத்தி வளாகத்தில் உருவாகும் இந்த அறிவு வரம்புக்குட்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட முக்கோணத்தைத் தவிர, இது பெயர் மற்றும் வடிவத்தையும் உள்ளடக்கியது.
"பெயர் மற்றும் வடிவம்" பகுதி அகற்றப்படும் விழிப்புணர்வுதான் சித் என்றும் அதுதான் மேல்கூறிய முக்கோணத்திற்கு (அறிபவர், அறியப்படு பொருள், அறிதல்) அடிப்படை; அந்த “சித்“ எனும் அறிவே நீக்கமற நிறை “சத்” எனும் இருப்பு என்று வேதாந்தம் கூறுகிறது. இதனைத்தான் ஞானம் என்கிறோம் வடமொழியில்.
இந்த ‘சித்’ என்னும் தூய உணர்வு வெளியில்தான் பிரபஞ்சம் என்னும் அனுபவம் இருப்புக் கொள்கிறது. நடப்பவையனைத்தும் இந்த வெளியில்தான் நடக்கின்றன. இங்குதான் அனைத்து அறிதலும் நிகழ்கிறது.
அறிவையும், அறியாமையையும் அறியும் அறிவே, அறியாமை இல்லாத அறிவு, என்று எல்லாம் அறியும் அறிவு தான் “சித்”.
சுவாமி ஓம்காரானந்தா
இதை அறிவதுதான் நம் இருப்பின் நோக்கமென்றே என்றுகூட சொல்லலாம். இதைப் பற்றித்தான்,
எல்லாம் அறியும் அறிவுதனைவிட்டு
எல்லாம் அறிந்தும் லாபமிங்கில்லை
எல்லாம் அறியும் அறிவை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையெனலாமே
என்கிறார் திருமூலர்.
எல்லாம் அறியும் அறிவை அறிந்துணர்ந்தபின் அறிவதற்கு ஏதும் இல்லாமல் போகும்போது, அனைத்தையும் அறியும் `சித்` என்னும் தூய உணர்வு, தூயஇருப்பான பரம்பொருளெனும் “சத்” எனும் ஆதாரத்தில் அடங்கிவிடுகிறது. திருச்சிற்றம்பலம் என்று நாம் கூறும் அனுபவம் நிகழும், காலமற்ற பெருவெளி இதனைத்தான் குறிக்கிறது. அனுபவிப்பவன், அனுபவம், அனுபவித்தல் என்னும்மூன்று நிலைகளைக் கடந்த அகண்டா கார நிலை அது.
துய்ப்பவன் நான் இல்லை,
துய்க்கப்படும் பொருள் நான் இல்லை துய்ப்பும் நான் அல்ல,
விழிப்புணர்வின் பேரின்ப உருவமே நான்
சிவம் நானே ! நானே சிவம்!
என்று தன் ஆத்மஸ்வரூபத்தைப் பற்றி ஆதிசங்கரர் நிர்வாண சதகத்தில் சொல்வதும் இந்த சித்ருபத்தை பற்றியே.
உடலையே தானெனக் கொண்டு, தன் பிற பரிமாணங்களைப் பற்றிய அறியாமையால் மனத்தின் அனுபவச் சேற்றில் சிக்கித் தவித்துத் துன்பமே வாழ்க்கையென வாழும் நம்மை விழிப்புக்கு அழைத்துச் செல்வது, `சித்` என்னும் `திரு (சத்)` நடனமாடும் உணர்வுவெளிதான். இந்ததிருச்சிற்றம்பலத்தில், இந்த திருவரங்கத்தில், இந்த திருச்சபையில்தான் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
அனந்தம்
"அனந்தம்" என்பதற்கு எல்லையற்றது என்று பொருள். எது எல்லையற்றது, எங்கெல்லாம் எல்லையற்றது என்பது அடுத்த கேள்வி நமக்கு. நாம் பரம்பொருளெறும் ப்ரம்மனின் தன்மைகளை ஆய்கிறோம். ஆகவே எல்லையற்ற, எங்கும், எதிலும் நீக்கமற “சத் சித்” ஆக இருப்பதே பரம்பொருளின் தன்மை.
நம்மைப் போன்ற எல்லா மனிதர்களுக்கும் மூன்று அடிப்படை வரம்புகள் உள்ளன, அதாவது இடஞ்சார்ந்த ("தேச"), தற்காலிக ("கால") மற்றும் பண்புகளால் ("வாஸ்து") வைரயறுக்கப்படுகிறோம். . நாம் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில், வரையறுக்கப்பட்ட பண்புகளுடன் வரையறுக்கப்பட்ட நேரத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதே, நமது இருப்புக்கு உள்ள இந்த மூன்று வரம்புகள்.
பிரம்மம் இந்த மூன்று வரம்புகளிலிருந்தும் விடுபட்டது. அது எங்கும் வியாபித்து இருக்கிறது என்று அர்த்தம். பிரம்மம் நித்தியமானது என்றும் முடிவே இல்லை என்றும் அர்த்தம். பொருள்களைப் போலன்றி, பரம்பொருள் வரையறுக்கப்படுவதோ அல்லது சில குணங்களின் அடிப்படையில் மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்படுவதோ இல்லை.
“பிரம்மன் ஒருவரே, அதை வேறு எவரிடமிருந்தும் பிரிக்க முடியாது. வேறு இல்லை. இது இரட்டை அல்ல. பிரம்மம் என்பது அத்வித்யம்."
எனவே, பிரம்மம் என்பது அனந்தத்தைக் குறிக்கிறது, பிரம்மம் எல்லாவற்றிலும் வியாபித்துள்ளது, நித்தியமானது மற்றும் இரட்டையற்றது. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வரம்புகளிலிருந்து இது விடுபட்டது.
சச்சிதானந்தம்
சத்யம் ஞானம் அனந்தம் என்ற சொற்றொடர், சச்சிதானந்தம் என்று சில சமயங்களில் அழைக்கப்படுகிறது.
சத் என்ற சுதந்திரமான, நித்திய, தூய இருப்பு, அனைத்து பெயர்கள் மற்றும் வடிவங்களுக்கு இருப்பை வழங்குகிறது. இடம், நேரம் மற்றும் பண்புகளால் வரையறுக்கப்பட்ட வெவ்வேறு பெயர்கள் மற்றும் வடிவங்களுடன் பொறி, புலன்களால் நாம் நுகரும் இருப்புகள் அனைத்தும் ஒரே "சத்" ஆகும்.
சித் எனும் தூய அறிவெனும் உணர்வு, எண்ணத்தின் முன்னோடி. "சித்", இருப்பதால் மட்டுமே எண்ணங்களை உருவாக்கும் திறன் கொள்கிறது மனம். என் மனதில் எண்ணங்கள் உருவாகும்போது, இந்த தூய உணர்வு எனக்கு புறநிலை அறிவைத் தருகிறது. ஒருவர் விழித்திருந்தாலும், கனவில் இருந்தாலும் அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் இந்த தூய உண்ர்வு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்வே “நான்” எனும் தன்னுணர்வு.
அனந்தம் எல்லையற்றது. ஆனால் இப்போது பிரம்மத்தை ஆனந்தம் என்று சொல்கிறோம். அனந்தமும் ஆனந்தம் ஆக முடியும்?
ஆராய்வோம். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லும் போதெல்லாம், நான் என்ன சொல்கிறேன்? தடைகள், ஆசைகள் மற்றும் வரம்புகள் இல்லாத அந்த தற்காலிக கட்டத்தில் நான் முழுமையாக, பூரணமாக திருப்தி அடைகிறேன் என்று அர்த்தம். அத்தகைய அரிய தருணங்களில் தன்னுணர்வெனும் “நானே” மகிழ்ச்சி. மகிழ்ச்சி என்பது நான் அனுபவிக்கும் ஒன்றல்ல என்பது தெளிவாக இருக்க வேண்டும். அந்த கட்டத்தில் நானே மகிழ்ச்சியாக இருக்கிறேன். "மகிழ்ச்சி" என்பது நான் எந்த தடையும் எல்லையும் இல்லாமல் இருக்கும் அந்த நிலையை விவரிக்கும் ஒரு வார்த்தை. அந்த வரம்பு இல்லாத நான் எல்லையற்றவன் என்பதன் வெளிப்பாடே மகிழ்ச்சி. அந்த வரம்பற்ற தன்மையில் பிரிவுகள், சோகம் போன்றவற்றின் சுவடு இல்லை. இந்த ஆனந்தம், எல்லையற்றது. ஆக ஆனந்தம், அனந்தம் ஆகிறது.
சுவாமி தயானந்த சரஸ்வதி இதை விளக்குகிறார்:
ஆனந்தம் அனந்தமாக இருக்க வேண்டும். ”சத்யம்-ஞானம்-ஆனந்தம் பிரம்மம்” என்பது தைத்தரேய பிரம்மானந்தவல்லியின் தொடக்கத்தில் வருகிறது. இது “ஸ்வரூப-ஆனந்தம், விருத்தி-கதா-ஆனந்தம் அல்ல.” இது இயல்பான ஆனந்தம்; எண்ண வெளிப்பாடல்ல. சத், சித் இரண்டும் எண்ணங்களைக் கடந்தவை. அந்த சத்சித்தே எல்லையற்ற ஆனந்தமாக இருப்பது. எனவே ஆனந்தம் என்பது எல்லையற்றது (அனந்தம்). அந்த ஆனந்தம், எல்லையற்ற தன்மை (அனந்தம்), முழுமை (பூர்ணத்வம்) என்ற அதே பொருள் கொண்டது. இதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்கவோ, கற்பனை செய்யவோ, அனுபவிப்பதோ இயலாது. காலம், இடம், பொருள் வாரியாக எழும் வரையறுப்புகளை ஒவ்வொன்றாக மறுப்பதன் மூலம், நாம் சுயமாக அறிந்துணருவது.
திருமூலர் இதனைத்தான்
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடாடிய
சுகத்தைச் சொல்லொன்னாற் சொல்லுமா றெங்கனே
என்று கூறுகிறார்.
வரையறைக்கு உட்பட்ட உடலால், வரையறைக்கு உட்பட்ட பொருட்களை அனுபவிப்பதன் மூலம், வரையறைக்கு உட்படாத ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. அந்த வரையறைக்கு உட்படாத ஆனந்தமே நான் தான் என்று அறிந்துணர்வது ஒன்றே இறைநிலை
என்று விளக்குகிறார் சுவாமி ஓம்காரானந்தா. இந்த இறைநிலையே சச்சிதானந்தம், பிரம்மானந்தம், ஆத்மானந்தம்.
முடிவுரை
சத் என்றால் உள்ளது , இருப்பது என்று பொருள் . இருப்புத் தன்மையோடு இருப்பது தான் சத். இந்த இருப்புதான் பரம்பொருளின் இயற்கையானஅம்சம். பரம்பொருளின் ஸ்வரூபம். இதுதான் ஆத்மாவின் ஸ்வரூபம். இந்த ஆத்மா ஒரு ஜடம் அல்ல . அது அறியும் தன்மையோடு உள்ளது . அறியும் தன்மை தான் ஆன்மாவின் இயற்கையான அம்சம் ஆகும். இது தான் ஆன்மாவின்/பிரம்மத்தின் இயற்கையான அம்சம். இது தான் சித். ஆக, இருப்புத் தன்மை என்பது சத் . அறியும் தன்மை என்பது சித் ஆகும். ஆன்மா/பிரம்மம் என்பது சத் ஆகவும் சித் ஆகவும் உள்ளது . எப்படி? நெருப்பினில் உள்ள வெப்பம் போல. ஆன்மாவின் அடுத்த அம்சம் ஆனந்தம் . ஆனந்தம் என்பது மகிழ்ச்சியின்வெளிப்பாடு. ஆன்மாவின் இந்த மூன்றாவது அம்சமான ஆனந்தத்தை , அனந்தம் என்றும் கூறுவதுண்டு. அனந்தம் என்றால் அந்தம் இல்லாதது. முடிவற்றது , எல்லையில்லாதது என்று பொருள் . எந்தப்பொருளாக இருந்தாலும் அதனை எல்லைப்படுத்தினால் மட்டுமே , அதனை ஒரு பொருளாகவோ அல்லது அனுபவமாகவோ எடுத்துக் கொள்ளமுடியும் . ஆன்மாவை எல்லைப்படுத்தி அறிய முடியாது என்பதால் அதனை அனந்தம் எனக் கூறுகிறார்கள் .
இனி வரும் பதிவில் அஷ்டாவக்ர முனிவர், ஜனக மஹாராஜனுக்கு உரைத்த மூன்றாவது ஸ்லோகத்தைக் காண்போம். அது வரை…….
இறையருள் பெருக!
வளமுடன் வாழ்க!
God Bless