Introduction
In this sloka, Sage Ashtavakra encourages Rajarishi Janaka to elevate his thinking to the next higher level. In this response he outlines two important principles:
The five great elements known as the “Pancha Maha Bhoothas”.
Consciousness, Awareness called “Cit” - The ultimate knowledge
An overview of these two philosophies were brought out in the previous two newsletters. Now let's try to learn the sloka.
The Sloka
na pṛthvī na jalaṃ nāgnirna vāyurdyaurna vā bhavān |
eṣāṃ sākṣiṇamātmānaṃ cidrūpaṃ viddhi muktaye ||
Meaning
You are neither earth, water, fire, air or even ether. Know yourself as “Citrupan”, the Consciousness, the witness.
Explanation
The Pancha Maha Boothas,five great elements are the ‘material cause’ with which the our gross body is made of and the subtle aspects of these elements constitute the subtle body viz., the mind-intellect combo. The gross body is the vehicle through which the subtle body functions.
Sage Ashtavakra first advises Janaka to know that “you are not Pancha Maha Bhoothas either at the gross or at the subtle levels”. This essentially means that you are neither the body nor the mind not even the intellect.
“Then who am I?” Understanding this unstated next question, the sage says that “you are Citroopa, the cognitive form of soul. You are nothing but the Consciousness that makes you aware of everything that you perceive using your body, mind and intellect”.
“The principle of Consciousness in everyone of us is the illumining factor that brings into our awareness all our physical and mental experiences. We are constantly conscious of our experiences within and without us. The Consciousness is a ‘witness’ in all the life’s experiences, in every individual living creature.”
Swami Chinmayananda
These are deep philosophies which will be discussed at depth in subsequent Slokas.
We will examine the next sloka in the next newsletter. Till then…….
முகவுரை
இந்த ஸ்லோகத்தில் அஷ்டாவக்ரர் தனது பதிலின் மூலம், ராஜரிஷி ஜனகரைஅடுத்த உயர்நிலையில் சிந்திக்கத் தூண்டுகிறார். இந்த பதிலில் இரு முக்கியதத்துவங்களை கோடிட்டு காட்டுகிறார்:
பஞ்ச பூதங்கள்,
சித் ருபம் - ஆத்மாவின் அறிதல் வடிவம்.
ஸ்லோகத்தை அறியும் முன், இந்த இரு தத்துவங்களைப் பற்றிய ஒருகண்ணோட்டம் நமக்கு முதலில் தேவை. அதனை முந்தைய இரண்டு பகுதிகளில் கண்டோம். இப்போது ஸ்லோகத்தை அறிய முயல்வோம்.
ஸ்லோகம்
ந ப்ருத்2வீ ந ஜலம் நாக்3னிர்ந வாயுர்த்3யௌர்ந வா ப4வாந்
யேஷாம் ஸாக்ஷிநமாத்மாநம் சித்3ரூபம் வி3த்தி4 முக்தயே
ந ப்ருத்2வீ ந ஜலம் ந அக்3னி ந வாயு: த்3யௌ ந வா ப4வாந்
யேஷாம் ஸாக்ஷிநம் ஆத்மாநம் சித்3ரூபம் வித்3தி4 முக்தயே
தமிழாக்கம்
புவி இல்லை, நீர் இல்லை, நெருப்பு இல்லை,
காற்று இல்லை, வானாகவும் இல்லை நீ!
சித்ரூபன் நீ, ஆத்மாவின் அறிதல் வடிவாய் இவைகளின் சாட்சி,
அறிவாயே வீடுபேறு அடைய நீ!!
விளக்கம்
பருநிலை இருப்பெனும் பௌதீக உடலின் அடிப்படை கட்டுமாண தொகுதிகள் தொடங்கி, காரண நிலையில் பௌதீக, இயற்பியல் மண்டலத்தின் வரம்புகளுக்கு அப்பால் உள்ள நீக்கமற நிறைந்த நிலையான உண்மையின் பிரதிநிதிகளாக இருக்கும் பஞ்ச பூதங்கள், நீ இல்லை என்பதை அறிவாயாக என்று ஜனக மஹாராஜனுக்கு அஷ்டாவக்ர முனி முதலில் அறிவுரைக்கிறார்.
சரி, அப்படியென்றால் நான் யார் என்று ராஜனின் மனதில் புதைந்த கேள்வியைப் புரிந்து கொண்ட முனிவர், நீ தான் சித்ரூபன் அதாவது நீ சித்ரூபமாய் (ஆத்மாவின் அறிதல் வடிவமாய்) இருக்கிறாய் என்று கூறுகிறார்.
வீடுபேறு (முக்தி) வேண்டும் என்று விழையும் நீ, புலனியக்கத்தால் ஏற்பட்ட அனுபவங்கள், அந்த அனுபவங்களின் மனப்பதிவுகள், அந்த மனப்பதிவுகளலிலிருந்து குறிப்பெடுத்து ஆராயும் பகுத்தறிவு இவைகளை எல்லாம் கடந்து, அறியும் தன்மை என்ற அறிதல் எனும் சித்ரூபம் தான் நீ என்பதை அறிந்துணர வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார் அஷ்டாவக்ர முனிவர், அரசனுக்கு.
மிக ஆழமான தத்துவங்கள். ஆழ்ந்து ஆய்வோம் அவனடி பணிந்து.
அஷ்டாவக்ரரின் அடுத்த அறிவுரை, அடுத்த பதிவில். அதுவரை…….
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
God Bless