Ashtavakra Gita Sloka 1.2 - The poison and the nectar
அஷ்டாவக்ர கீதை ஸ்லோகம் 1.2 - நஞ்சும் அமிழ்தும்
Introduction
In this second sloka, in response to Rajarishi Janaka's first question (published in the previous newsletter), sage Ashtavakra lays down two essential plans for us to succeed in our spiritual journey.
Sloka 1.2
aṣṭāvakra uvāca |
muktimicchasi cettāta viṣayānviṣavattyaja |
kṣamārjavadayātoṣasatyaṃ pīyūṣavadbhaja || 2 ||
Meaning
“If you aspire for Liberation, my child, reject the objects of the senses as poison and seek forgiveness, straightforwardness,kindness, cheerfulness and truth as nectar”.”
Swami Chinmayananda
Explanation
Here Sage Ashtavakra addresses the King who is much older to him as “my child”. This is akin to the young child, Lord Subramanya who taught His father Lord Siva the meaning of Pranava. Age is not a criteria to become a Guru.
In this second sloka, the sage gives us a list of "don't"s and "do"s - things that should be avoided and things that should not be avoided.
Sage Ashtavakra compares the things to be avoided to poison and the things that should not be avoided to the nectar. The sage says that the most important principle in Vedanta is understanding what the ultimate truth "Satyam" is.
He identifies objects of the senses as poison and forgiveness, straightforwardness, kindness, cheerfulness and truth as nectar. Let us examine these words.
Objects of the senses - If an object exists and I am dependent on it at an emotional level and if that object disturbs me even if it doesn’t physically exists, then that object is a subject matter (“vishaya:”) or a sense object. If it doesn’t disturb me then it is just a physical matter (“padaartha:”) for me.
The mind, after all, is generally regarded as synonymous with our thoughts, feelings, memories, and beliefs, and as the source of our behaviors. It’s not made of material, but we think of it as quite powerful. Humans are an easily distracted species — if you don’t believe it, just look at everyone around you on a smartphone right now — but we’ve always longed for ways to regulate our own attention.
In the Bhagavad Gita, Arjuna remarks to Krishna that the mind “is as difficult to control as the wind.” Krishna replies that with practice and indifference to worldly objects, the mind indeed can be restrained. He also clearly explains “When a man thinks of objects, attachment for them arises; from attachment desire is born; from desire arises anger”
Swami Chinmayananda explains this term
“To the unguarded mind, the whispers of the lower passions become suddenly more urgent than the call of the higher aspirations. Desire for enjoyment makes man slip from his own high values-of-life and his disciplines in it”.
”Mind, even from a solitary cave in the Himalayas, can, by its own imagination, get agitated, all by itself! Mind is to be constantly guarded and carefully protected from its own inherent sensuality, by inculcating into it the healthier values of life and thus re-educating the wayward mind.”
That leads us to the next three termed as nectar by the Sage.
Forgiveness
An intentional decision to let go of resentment and anger can be called as forgiveness. That requires mental strength to face squarely, diametrically opposite experiences and withstand the same. This again can come through determination and practice.
Straightforwardness
My personality, acting harmoniously with body, speech and mind is a sign of honesty (arjavam). If what I say, what I think and what I do is not aligned, it is anarjavam. Rectitude of conduct, uprightness, honesty, sincerity, open-heartedness are the elements of straightforwardness.
Kindness
Understanding the feelings of others and act to alleviate the sufferings of others is kindness. Compared to compassion, it is more action oriented. The Sanskrit word for kindness is Dayā.
Contentment
Contentment is the calm joy or quiet pleasure we feel when our needs are (even transiently) satisfied and we are in harmony with ourselves and our surroundings. Some researchers describe contentment as “low in activation,” “high positive valence,” and “the lack of anxiety”. It is a state of Happiness.
Sathyam
Sathyam or Truth is a subdivision of Honesty (Arjavat). Arjavam is about the complete Integrated personality. Satyam is the alignment of thought and speech. Satyam is contained in Arjavam. Satyam is mentioned separately because it is a very important value. At the Spiritual level the word Satyam means “being” and refers to what we might call “eternality” or temporal limitlessness; the truth that there is no beginning and no end and there is only pure existence consciousness that is eternal and indestructible. At the practical operating level, it means discipline in life.
Mundaka Upanishad, the second sloka (2-2-2) explains what satyam is:
yadarcimadyadaṇubhyoṇu ca yasmiɱllokā'nihitā lokinaśca |
tadetadakṣaraṃ brahma sa prāṇastadu vāṅmanaḥ | tadetatsatyaṃ tadamṛtaṃ tadveddhavyaṃ somya viddhi || 2 ||2. What is bright, what is smaller than the small, in what are centred all the world and those that live in them is this immortal Brahman. That is prana, that is speech and mind. That is true and immortal …….
Essentially these five values of life are the nurture and nourishment for the inner spiritual seeker as they are the enemies of desire.
Conclusion
Through the magic mirror coated with the three compounds viz., time, space, and cause, with our senses constantly looking outwards, the objects and things that we consume and our experiences of the world are all the flow of our thoughts. Our mind is the flow of these thoughts. When these thoughts flood us, the mind becomes unruly. Therefore, the factors that control the thoughts and calm the mind should be cultivated as Nectar; Weeds that take the mind for a ride should be cut and should be avoided as a poison.
“Achieving both spiritual growth and higher meditation is possible only with a fully integrated personality. Therefore:
Set aside (weed out) all worldly experiences and things consumed by the senses;
Cultivate the five factors of Forgiveness, Honesty, Kindness, Contentment , and Satyam (Truth),
Travel inward and get the nutrients we need for our quest for infinite bliss”.
Swami Chinmayananda points out that this is the essence of the first advice given to Janaka in this Sloka.
ஸ்லோகம் 2 - நஞ்சும் அமிழ்தும்
முகவுரை
ஆன்மீகப் பயணத்தில் நாம் வெற்றி பெற, இந்த இரண்டாவது ஸ்லோகத்தில் இரண்டு இன்றியமையாத திட்டங்களை வகுத்துக் கொடுக்கின்றார் அஷ்டாவக்ர முனிவர், ராஜரிஷி ஜனகரின் முதல் கேள்விக்கு.
ஆங்கிலத்தில் list of “don’t”s and “do”s எனக்கூறுவர். தவிர்க்க வேண்டியவை, தவிர்க்க கூடாதவை என்று பட்டியல் போட்டு நமக்கு அறிவுரையாக வழங்குகின்றார் இந்த இரண்டாவது ஸ்லோகத்தில்.
தவிர்க்க வேண்டியவைகளை நச்சிற்கும், தவிர்க்க கூடாதவைகளை அமிழ்துக்கும் ஒப்பிட்டு உட்கருத்தினை மனதில் ஆழமாக பதிய வைக்கிறார் அஷ்டாவக்ர முனிவர். வேதாந்தத்தில் மிக முக்கியமான தத்துவமான “சத்யம்” எனும் பரம்பொருளை நாடு என்கிறார் முனிவர்.
ஸ்லோகம் 2
முக்திம் இச்ச2ஸி சேத் தாத!
விஷயான் விஷவத் த்யஜ
க்ஷம ஆர்ஜவ த3யா தோஷ
ஸத்யம் பீயூஷ வத்3 ப4ஜ
தமிழாக்கம்
முக்தியை நாடினால், நஞ்சென ஒதுக்கிடு
பொறிபுலன் வழியறி பொருட்கள்தனை!
மன்னித்தல், நேர்மை, கருணை, மகிழ்வு,
உண்மை தனை அமிழ்தென நாடு அப்பனே! !
விளக்கம்
முக்தியின் விளக்கத்தை முதல் ஸ்லோகத்தில் பாரத்தோம். இப்போது இந்த ஸ்லோகத்தில் உள்ள மற்ற சொற்களுக்கு ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் விளக்கத்தை இப்பொழுது காணலாம்.
1. அப்பனே - பிரணவத்தை, ஆதியோகியும் அண்டங்களுக்கெல்லாம் குருவான தந்தைக்கு எடுத்துரைத்த குமரனைப் போல, மிதிலை நகர மாமன்னனை சிறுவனென “அப்பனே” என்று அழைப்பதன் மூலம், ஆன்மீக அறிவுரைக்கு, குருவின் வயது முக்கியமில்லை என்ற கருத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறார் முனிவர்.
2. பொருள் - சமஸ்க்ருதத்தில் பொருளை, பதார்த்தம், விஷயம் என்று இருவகையாக பிரித்துக் கூறுவர். ஒரு பொருள் இருக்கும் போது, நான் அதை உணர்வுப்பூர்வமாகச் சார்ந்திருந்து, அந்த பொருள் இருந்து (அல்லது இல்லாத நிலையிலும் கூட) என்னை உழட்டினால் அது விஷயம்; இல்லையென்றால் அது பதார்த்தம்.
3. மன்னித்தல் - எதிர்மறை அனுபவங்களை எதிர்நோக்கி தாங்கிடும் மனவலிமையே மன்னிக்கும் தன்மை எனப்படும்.
4. நேர்மை - எனது ஆளுமை (personality), உடலால், வாக்கால், மனதால் இணக்கமாக செயல்படுவது நேர்மையின் (ஆர்ஜவம்) அடையாளம். நான் பேசுவதும், நான் நினைப்பதும், செய்வதும் சீரமைக்கப்படாமல் இருந்தால் அது அனார்ஜவம்.
5. கருணை - மற்றவர்களின் உணர்வுகளை அறிந்துணருவது கருணை.
6. மகிழ்ச்சி - மகிழ்வு என்பது மன நிறைவினை குறிப்பது.
7. சத்தியம் - சத்தியம் அல்லது உண்மை என்பது நேர்மையின் (ஆர்ஜவத்தின்) உட்பிரிவு. ஆர்ஜவம் என்பது முழு ஆளுமை (personality). சத்யம் என்பது சிந்தனை மற்றும் வாக்கின் சீரமைப்பு. சத்யம் ஆர்ஜவத்தில் அடங்கியுள்ளது. சத்யம் மிக மிக முக்கியமான மதிப்பு என்பதால் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் இது பரம்பொருளை குறிக்கும் - ஆதியும் அந்தமுமில்லா நீக்கமற நிறை தூய இருப்பெனும் உண்மை. நடைமுறையில் இது வாழ்க்கையில் ஒழுக்கத்தை குறிக்கும்.
“ எது ஸ்வயம் ஜோதி வடிவமோ, எது அணுவைக் காட்டிலும் சிறியதோ, எது உலகங்களுக்கும் மக்களுக்கும் ஆதாரமாக உள்ளதோ, அதுவே இந்த அழியாத பிரம்மன். அதுவே பிராணன். அதுவே வாக்கும் மனமும். அதுவே ஸத்யம். அதுவே அழிவற்றது. அதை அறிய வேண்டும்.. இனியவனே அதை நீ அறிவாயாக”
என்று முண்டக உபநிஷத்தில் இரண்டாவது முண்டகத்தில், இரண்டாவது கண்டத்தில், இரண்டாவது ஸ்லோகம் (2-2-2) சத்யம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
முடிவுரை
காலம், இடம், காரணம் எனும் மூன்று கலவைகளை முலாமாகப் பூசிய மாயக் கண்ணாடி வழியாக, இடைவிடாது வெளி நோக்கும் பொறி புலன்கள் கொண்டு, நுகரும் பொருட்களும் உலக அனுபவங்கள் அனைத்தும்தான் நம் எண்ணங்களின் ஓட்டம். அந்த எண்ணங்களின் ஓட்டமே நமது மனம். அந்த எண்ணங்கள் வெள்ளப் பெருக்கென நம்மில் பாய்ந்தால், மனம் கட்டுக்கடங்காமல் போகும். எனவே எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்தும் காரணிகளை அமுது என நாடி பயிரிட வேண்டும்; மனதை தரிகெட்டலையவைக்கும் காரணிகளை விடமென களை அறுக்க வேண்டும்.
ஆன்மீக வளர்ச்சி மற்றும் உயர்நிலை தியானம் என்ற இரண்டினையும் அடைய, முற்றிலும் ஒருங்கிணைந்த ஆளுமையால் (fully integrated personality) மட்டுமே சாத்தியமாகும்.
1. பொறி புலன்கள் கொண்டு நுகரும் பொருட்களையும் உலக அனுபவங்கள் அனைத்தையும் விடமென ஒதுக்கி (களையெடுத்து),
2. மன்னித்தல், நேர்மை, கருணை, மகிழ்வு, உண்மை என்ற ஐந்து காரணிகளை அமிழ்தென நாடி (நாம் பயிரிட்டால்),
3. உள் நோக்கி பயணித்து எல்லையற்ற பேரின்பத்தை தேடும் பணிக்கு நமக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
இதுதான் ஜனகருக்கு கொடுக்கப்படும் முதல் அறிவுரையின் சாரம் என்று ஸ்வாமி சின்மயானந்தா எடுத்துரைக்கிறார்.