Note:
I must record at the outset my sincere thanks to a close friend of mine; His inspiration is the main reason why I first came to know this great sacred work and share with you whatever I have learnt from my study of the Slokas.
My heart says that Lord Sri Dakshinamurthy, the Sublime Guru of the Universe himself has come in the form of my friend and directed me to start the learning and share the same with others. Notably my friend's name itself represents the Lord. My humble regards and thanks to my friend Mr. Kasinath.
Usually when I start reading a new lesson, report or article, I tend to take notes. This newsletter and the ones that follow are indeed such study notes on Ashtavakra Gita.
Introduction
Our sanatana dharma, our way of life, reveals the lifestyle and experiences of our forefathers, who lived with high spiritual consciousness and gained real knowledge, thousands of years ago. They then brought that knowledge in the aural and text forms such as Sruti - Vedas, and Smruti like Upanishads, Bhagavad Gita, Puranas, Epics. In their Ashrams, our rishis and sages transferred this knowledge to their disciples in two ways
1. As advices - called Boda
2. As dialogues - called Gita
Bodha is an advice by the Guru to the qualified student. The important requisites of an advisory work are four and are collectively called Anubandha Chatushtaya. They are:
Vishaya - A subject to be dealt with. In Vedanta it is Brahman.
Sambandh - A connection between the work as a whole and the subject dealt with.
Prayojana - A benefit to be obtained by studying it. Here it is Moksha or liberation as the English language calls it.
Adhikari - A qualified student. Here it is one who is endowed with the four means of salvation. i.e., Sadhana Chatushtaya,
Gita is a dialogue between the Guru and the qualified student. The universally well known and followed, the Bhagwad Gita, is a dialogue between Lord Krishna and Arjuna. Most of the Gitas originated from either from Mahabharat or from the other epics.
Ashta Vakra means eight different crooked (curved) shapes. The young sage had eight eight different crooked (curved) shapes in his body (specially abled) and hence was called Ashta Vakra Sage.
King Janaka who ruled Mithila was a very learned person. He ruled Mithila by following Sanatan Dharma. He was a Karma Yogi, knew the Vedas and Sastras and a highly qualified and advanced student in the field of Vedanta. He was a Raj Rishi.
Ashtavakra Gita is a dialogue between the king and his Guru Sage Ashtavakra. The dialogue covered advanced advaita vedanta principles and practices.
According to eminent Indian scholar and historian Radhakamal Mukherjee, Ashtavakra Gita may have been composed in the fourth or fifth century BC. However, there is no evidence for this. Based on the monotheistic philosophy of Advaita, this text appears to have been composed after the works of Adi Shankaracharya. I strongly believe in the famous saying in India “Don’t try to find the roots of a river and a Rishi”. So, history is not important to us here because our focus is on learning.
Their conversation is our education. The dialogue consists of twenty chapters and 298 Sanskrit slokas (verses). This Gita powerfully expresses the non-dualistic (Advaita) philosophy of knowing and realising who you are and in that process helps one in cutting off the shackles and barriers to such realization.
“In communicating to the seekers the unsurpassing beauty and indefinable perfections of the Absolute, the Prasthaana Traya viz., Upanishads stammer, the Brahmasutras exhaust themselves and the Bhagwad Gita hesitates with an excusable shyness. We must in sheer gratitude, admire Ashtavakara Gita for the brilliant success it has achieved in communicating, through words, perhaps more clearly, the nature and glory of the Supreme Reality, than by the Prasthaana Traya” says Swami Chinmayananda in his commentary.
Swami Paramarthananda in his lecture states that “The Ashtavakra Gita or Samhita is a Nidhithyaasana ( very advanced state of meditation); not a book for basic spiritual education. It is a book that teaches one who is well versed in advaita philosophy to realize it in practice. For those who live their daily life with a sense of helplessness in knowing about oneself, it is a helpful book that frees the mind and help them know their Self without fear”.
Blessed are those who venture into the study of Ashtavakra Gita.
We will commence our study from the next newsletter. God willing, I am planning to do a minimum of one Sloka a month, as it involves extensive study in depth.
தமிழாக்கம்
குறிப்பு
எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு எனது மனமார்ந்த நன்றியை துவக்கத்திலேயே பதிவு செய்ய வேண்டும்; அவரது தூண்டுதலே, நான் இந்த பெரிய புனிதமான படைப்பினை அறிய முயல்வதற்கும், என் குறுகிய அறிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மூல காரணம்.
அனைத்து அண்டங்களின் ஆழ்மௌன குருவான ஶ்ரீதட்சிணாமூர்த்தி ஆண்டவனே எனது நண்பரின் வடிவில் வந்து, என்னை இயக்கி நடத்துகிறார் என்கிறது என் உள்ளம். எனது நண்பரின் பெயரும் அதற்கேற்றபடியே அமைந்துள்ளது. என் நண்பர் திரு.காசிநாத் அவர்கட்டு எனது பணிவான வணக்கமும் நன்றியும்.
பொதுவாக ஒரு புதிய பாடத்தையோ, அறிக்கையையோ, பதிவினையோ நான்படிக்கத் துவங்கினால், குறிப்புகள் எடுத்துக்கொள்வது எனது பழக்கம். அஷ்டாவக்ர கீதையின் அப்படிப்பட்ட குறிப்புகளின் வடிவமே இப்பதிவுகள்.
இப்பதிவுகள் , உலகுக்கு என் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. ஞான யோகத்தில் முதல்நிலை மாணவனுக்கு உரையாடல் வழி உபதேசிக்கப்பட்டதை, அறிவிலியாகிய நான், பதிவுகள் வடிவில் வெளியிடுவது என்பது, என் அகங்காரத்தை அல்ல, மடமையைக் குறிக்கிறது என்றே கூறலாம்.
சொற்குற்றம், பொருட்குற்றம் கண்டீரெனில், மழலை கூறும் குழவியின் தடுமாற்றம் என்று கருதி, அவைகளை சுட்டிக்காட்டிடுவீர். அறிந்துணர முயன்றிடுவேன்.
அஷ்டாவக்ர கீதை - முகவுரை
நமது ஸனாதன தர்மமெனும் வாழ்வியல், பல ஆயிரக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பே, உயர் ஆன்மீக உணர்வு நிலையுடன் வாழ்ந்தனுபவித்து மெய்ப்பொருளறிவு பெற்ற நம் முன்னோர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் அனுபவங்களையும் ஒலி வடிவிலும் (ஸ்ருதி எனும் வேதங்கள் - நான்கு மறைகள்) நூல் வடிவிலும் (ஸ்ம்ருதி எனும் உபநிடதங்கள், பகவத் கீதை, புராணங்கள், இதிகாசங்கள்) வெளிக்கொணர்ந்தது. இவற்றின் விளக்களை நமது ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள் தமது சீடர்களுக்கு இரண்டு வகையாக வழங்கினர்:
போதா எனும் அறிவுரைகளாக
கீதா எனும் உரையாடல்களாக
அறிவுரைகளை (போதா) “அநுபந்த சதஷ்டையம்” என்பர். அதாவது இந்த நூல் போதிக்கும் விஷயங்கள் நான்கு:
அதிகாரி - இதைக் கற்பதற்குரிய தகுதி உடையவர்கள்
விஷய - இந்த நூலில் கூறப்படும் உண்மை/கருத்து/தத்துவம். உதாரணமாக, பரம்பொருள், சீவன், உலகம் என்ற மூன்று தத்துவங்களே இந்நூலின்விஷயம் என்பது.
சம்பந்தம் - இந்த மூன்று தத்துவங்களுக்கிடையே உள்ள உறவு.
ப்ரயோஜனம் - இந்த நூலின் பயன்கள்
கீதையென்பது, இறையியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் உரையாடல் வடிவில் (பெரும்பாலும்) உள்ள வசனங்கள். பொதுவாக குரு-சிஷ்ய (ஆசான்-மாணாக்கன்) இடையே நடைபெற்ற உரையாடல்கள். பெரும்பாலானவை [அஷ்டாவக்ரகீதை உட்பட] மகாபாரதம் அல்லது பல்வேறு புராணங்களில் இருந்து தோன்றியவை.
அஷ்டாவக்ரம் என்றால் எட்டு வகையான கோணல்கள் கூடியது என்று பொருள். எட்டு கோணல்களுடன் கூடிய உடலைக் கொண்டவர் என்பதால் அஷ்டாவக்ரர் என்று பெயர்.
மிதிலை நகர பேரரசனும், ஞானியுமான ஜனக மஹாராஜன், சகல சாஸ்த்ரங்களைக் கற்ற பண்டிதன். சனாதன தர்மங்களை கடைபிடித்து ராஜபரிபாலனை புரியும் உயர்நிலை கர்ம யோகி. ஆத்ம ஞானத்தின் மூலம், தன்உண்மை நிலையை அறிந்துணரத் துடிக்கும் முதல் நிலை ஞான யோகமாணவனான ராஜ ரிஷி.
அஷ்டாவக்ர கீதை என்பது முனிவர் அஷ்டாவக்ரருக்கும், அந்த ராஜரிஷிக்கும் நடைபெற்ற உயர்நிலை ஆன்மீக உரையாடல்.
அந்த மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார். இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது.
புகழ்பெற்ற இந்திய அறிஞரும் வரலாற்றாசிரியருமான ராதாகமல் முகர்ஜியின் கூற்றுப்படி, இது கிமு நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். எனினும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அத்வைதம் எனும் ஒருமை நிலை தத்துவ அடிப்படையிலான இந்த உரை ஆதிசங்கராச்சாரியாரின் படைப்புகளுக்குப் பிறகு இயற்றப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
நதி மூலம், ரிஷி மூலம் காணக்கூடாது என்ற நமது தொன்றுதொட்ட நடைமுறைக்கொப்ப இவர்களின் வரலாறு நமக்கு முக்கியமல்ல.
இவர்களின் உரையாடலே நமக்கு கல்வி. இந்த உரையாடல், இருபது அத்தியாயங்களாக, 298 சமஸ்க்ருத ஸ்லோகங்களாக (வசனங்கள்) உள்ளன. இந்த கீதை ஆன்மாவை அறிந்துணர்வது, அப்படி உணர்வதற்கானதளைகளையும் தடைகளையும் அறுப்பது, இருமையற்ற (அத்வைத) ஒருமை தத்துவத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது.
ஸ்வாமி சின்மயானந்தா, “நீக்கமற நிறை, அழிவிலா ஒருமையெனும் தத்துவத்தை “பிரஸ்தானத்ரையா” எனப்படும் சனாதன தர்மத்தின் மூன்று முக்கிய உரையேடுகளைவிட (உபநிடதங்கள், பகவத்கீதை, ப்ரம்ம சூத்திரம்) தெளிவாக, நேரடியாக எடுத்துரைப்பதை நன்றிக்கடனுடன் நாம் புகழவேண்டும்” என்கிறார்.
சுவாமி பரமார்த்தானந்தா “அஷ்டவக்ர கீதை அல்லது சம்ஹிதை ஒரு நிதித்யாசனம்; ஆன்மீகத்தின் அடிப்படைக் கல்விக்கான நூல் அல்ல. ஆன்மீகத்தை (அத்வைத தத்துவத்தை) நன்கறிந்த ஒருவருக்கு நடைமுறையில் அதை உணர்ந்து வாழ உபதேசிக்கும் நூல் இது. அன்றாட வாழ்வில் பிறவிப்பிணியால் அல்லலுற்று வாழ்வோரின் மனதினை, உதவியற்ற தன்மையிலிருந்து விடுவித்து அச்சமின்றி ஆன்மாவை அறிய மாற்றிடும் உதவும் நூல்” என்று கூறுகிறார்.
அடுத்த பதிவிலிருந்து அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகங்களை அறியத் தொடங்குவோம். மாதம் ஒரு ஸ்லோகமாவது பதிவிடலாம் என்ன திட்டம். ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு ஆழ்கடல். இறைவன் அருளால் பணி தொடரும். அதுவரை
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!