Ashtavakra Gita - Sloka 1.1 - Part 2 - Mukti & Detachment
The basic questions-continued
The earlier newsletter highlighted the essence of the first part of the opening question asked by King Janaka to Sage Ashtavakra. That part dealt with “Brahma Jnana”, the knowledge about Brahman which in essential is knowledge about oneSelf (“Atma Jnana”).
Now we will look at the remaining two parts of the question. They deal with Mukti called Liberation and Detachment.
Mukti - Liberation
As long as one recognizes the world as objects, emotions, and thoughts through one's body-mind complex in life, one cannot escape the experiences of limitations, emotions, and suffering. Like a lamp lit in the wind, like a canoe plowing through the crashing hurricane like waves, the world of pleasure and pain will constantly attack. Any student who has advanced as a seeker (of Mukti) will know that this is everywhere and at all times. The next question that naturally arises in him is “How to attain liberation/freedom (mukti)” from all these.
Our scriptures say that Mukti is a mental state of understanding and realising through direct experience of the Self as the eternal, limitless, omnipresent, omniscient Ultimate Reality called Brahman.
That state, that complete freedom that we yearn can be realised
even when one is alive and continue our experience of the world using our body, mind and intellect.
under the guidance of a Guru where he/she as an individual can attain that state of knowledge and realise Brahman as nothing but him/her Self.
Raja Rishi Janaka, who was well aware of this state, put this question to the Guru to know how to free ourselves from the self-identity imposed by our physical and mental complex and realize our infinite divine state.
Determination for Detachment - Vairagya
In order to attain the state of complete liberation called Mukti, we have to become detached from our own paraphernalia of feelings and thoughts. How is that possible?
First, we must clearly understand what attachment and detachment mean. Often, we think of giving up attachment as giving up connection with family, objects, ideas etc or withdrawing from the world. In fact, we cannot run away from the world because it is everywhere in one form or another.
When I feel incomplete i.e., the self, the consciousness in me called “I” feels incomplete. In its illusion, it believes that it can be complete by acquiring, possessing, and experiencing the things it perceives outside of itself, and the feeling of attachment arises. Thus as long as an individual lives in this sense, he/she cannot avoid his/her sense of attachment.
“Thinking about objects leads to attachment to them. Attachment turns into desire. Desire causes anger, anger causes delirium, memory slips, logic and reason getting corrupted and destroyed by this deluded memory”
Bhagwad Gita (2.62,63)
Lord Krishna did not say in the Bhagavad Gita not to have any connection with the world. What we need is a healthy relationship with the world beyond likes and dislikes.
Summary of Sloka 1
The sloka (covered in two parts) introduces five important factors that are essential for spiritual life,
A spiritual guru,
an earnest disciple,
knowledge of self,
renunciation of desires and worldly pleasures, and
interest in liberation
What looked like an innocuous question contains concepts which have deep ramifications in one’s pursuit of understanding oneself.
What looked like an innocuous question by a King, contains queries that involve advanced concepts in Advaita. By examining the question in depth we can understand why King Janaka was called Raj Rishi after all .
We will try and understand the response of Sage Ashtavakra in the second Sloka in the subsequent newsletters. Until then ……
தமிழாக்கம்
முந்தைய பதிவில் ஐனக ராஜன், தனது குருவான அஷ்டாவக்ரரிடம் கேட்ட கேள்வியின் முதல் பகுதியான அறிவைப் பற்றியது. அந்த பகுதியின் உட்கருத்தான “நான் யார்?” என்பதை அறியும் அறிவே என்றும் மற்றவை அனைத்தும் அறியாமை என்பதையும் கண்டோம். இப்போது, கேள்வியின் மற்ற இரு பகுதிகளைக் காண்போம். இவைகள் முறையே வீடுபேறு எனும் முக்தி, பற்றின்மை ஆகியவற்றைப் பற்றியது.
முக்தி - வீடுபேறு
வாழ்வில் தனது உடல், மன புத்தி வளாகம் மூலம் பொருள்கள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களாக உலகத்தை அடையாளம் காணும் வரை, வரையறுப்புகள், சிற்றின்பங்கள், மற்றும் துயரங்களின் அனுபவங்களிலிருந்து தப்பிக்க முடியாது. காற்றினிலே ஏற்றி வைத்த தீபமென, சூரைக்காற்றென மோதும் அலைகளில் உழலும் தோனியென இன்ப துன்ப உலகம் இடைவிடாமல் தாக்கும். இப்படி எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கட்டுண்டு சொல்லவல்லா நிலையிலிருப்பதை, ஆன்மீகத்தில் உயர்நிலையில்உள்ள எந்த மாணவனும் அறிந்துணர்வான். இயற்கையாகவே அவனுள் எழும் அடுத்த கேள்வி “இதிலிருந்து விடுதலை (முக்தி) கிடைப்பது எப்படி”?
அந்த விடுதலை என்பது, ஒருவர் உயிருடன் இருக்கும்போது கூட (அதாவது, நம்முடைய அன்றாட வாழ்வில், உடலும், உடல் சார்ந்த தண்ணுணர்வால் வரும் வினைகளைப் புரியும் உயிராக இருந்தும் கூட), அவ்வினைகள் புரிந்து அல்லலுறும் “உயிரான நான்” அவைகளில்லை, அவைகளனைத்தும் நிழலே, தான் நிஜமான சச்சிதானந்தமே என்ற உள்ளுணர்வு ஒன்று மட்டுமே இருக்கும் பூரண சுதந்திர நிலை என்கின்றன நமது மறைகள்.
இந்த நிலையை நன்கு அறிந்துணர்ந்த ராஜரிஷி ஜனகர், உடல், மன புத்திவளாக சொந்த அடையாளத்திலிருந்து நம்மை விடுவித்து நமது எல்லையற்ற தெய்வீக நிலையை உணர்வது எப்படி என்பதை அறிய இந்தக் கேள்விதனை வினவினார் குருவிடம்.
வைராக்யம் (பற்றின்மை)
முக்தி எனும் முழுமையான விடுதலை எனும் உணர்வு நிலையை அடைய, நமது உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் சொந்த உபகரணங்களிலிருந்து நாம் விலகி, பற்றின்மையுடன் இருக்க வேண்டும். அது எப்படி ?
முதலில் , பற்று மற்றும் பற்றின்மை என்றால் என்ன என்பதை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும், பற்றுதலைக் கைவிடுவது என்பது குடும்பத்துடனான தொடர்பைக் கைவிடுவது அல்லது உலகத்தை, பொருட்களை விட்டுவிலகுவது என்று எண்ணுகிறோம். உண்மையில், நாம் உலகத்தை விட்டு ஓடமுடியாது, ஏனென்றால் அது எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில்உள்ளது.
“நான்” எனும் தன்ணுணர்வு முழுமையடையாததாக உணரும்போது, அதன் மாயையில், அது தனக்கு வெளியே உணரும் பொருட்களைப் பெற்று , உடைமையாக்கி அனுபவிப்பதன் மூலம் முழுமையடையும் என்று நம்புவதால், பற்றுதல் உணர்வு நமக்குள் எழுகிறது. இவ்வாறு ஒரு தனிமனிதன் இந்த இருமை உணர்வில் (நான், உலகம்) வாழும் வரை, அவனுடைய பற்றுதல் உணர்வைத் தவிர்க்கமுடியாது.
அப்படி, பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது. பற்றுஆசையாக மாறுகிறது. ஆசையால் கோபம், கோபத்தினால் மனமயக்கம், மனமயக்கதால் நினைவு நழுவுதல், நினைவு நழுவுவதால் பகுத்தறிவின் சீர்கேடு, பகுத்தறிவின் சீர்கேட்டால் மனிதன் அழிகிறான்”
பகவத் கீதை (2.62,2.63)
உலகத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று அவன் பகவத் கீதையில் கூறவில்லை. நமக்கு தேவை, விருப்பு-வெறுப்பு கடந்த, ஆரோக்கியமான சார்பு நிலையற்ற உலக உறவு.
முடிவுரை
முதல் ஸ்லோகம் (இரண்டு பகுதிகளாக நாம் கண்டது) ஆன்மீக வாழ்க்கைக்கு அவசியமான ஐந்து முக்கிய காரணிகளை அறிமுகப்படுத்துகிறது,
ஆன்மீக குரு,
தகுதியுடைய சீடர்,
ஆத்ம ஞானம் (பிரம்ம ஞானம்)
பற்றின்மை
வீடுபேறில் ஆர்வம்
ஒரு தீங்கற்ற எளிய கேள்வியாகத் தோன்றும் இந்த ஸ்லோகம், தன்னைப் புரிந்துகொள்வதில் நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டும்.
கேள்வியை ஆழமாக ஆராய்வதன் மூலம், ஜனக மன்னன் ஏன் ராஜ ரிஷி என்று அழைக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அடுத்த பதிவுகளில் இரண்டாவது ஸ்லோகத்தை அறிய முற்படுவோம். அதுவரை….
God Bless
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!