பாமரனான நான், வேதாந்தம் பற்றி அறிய முற்படும் போது அறியாமை, தடுமாற்றம், தவறுகள் என பல முன்னின்று தடை போடும். அப்போதெல்லாம் எனக்கு தேவை என நான் தேடுவது “தெய்வத்தின் குரலும்” எனது பெற்றோர்களின் வாழ்க்கை ஏடுகளும்.
“அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா
வித்யாமார்கோபதேஷ்ட்டாரம் வித்யாரண்யகுரும் ஷ்ரேயே”
என்ற ஸ்லோகத்தின்படி
அறியாமையாகிய அடரிருள் காட்டில், திசை தெரியாமல் திரிந்தலையும் எனக்கு, மெய்யறிவு நெறியை யானும் புரிந்து கொள்ளும் வகையில் அருளுரையாக வழங்கிய அந்த தெய்வத்தின் பொற்பாதங்களை வணங்கி, முடிவிலா இந்த என் முயற்சிக்கு இதோ அந்தக் குரலையே முடிவுரையாக சமர்பிற்கின்றேன்
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!
தெய்வத்தின் குரல்
அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதனால், பக்தி செய்வதனால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஓர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே! அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப் பொருளைச் சொல்லமுடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.
இது தெய்வத்தின் குரல். பக்தனான எனக்கு மன அமைதி அளிக்கும் அந்த தெய்வத்தின் காலடிகளில் என் பதிவுகள் அனைத்தும் சமர்ப்பணம்.
சிறியோனின் விண்ணப்பம்
இதுவரை 11 பதிவுகளில் என் சிற்றறிவில் பதிய முயற்சித்த வேதாந்த தத்துவங்களை (இறைவன், நான், இயற்கை, மாயை, மனம், கர்ம யோகம், சிரத்தை, பக்தி) வலைதளப் பதிவுகளாக வெளியிட்டேன்.
சிறியவன் நான் மழலை என உரைத்த இந்தப் பகுதிகளில் பிழைகள் பல காணலாம். அவைகளுக்கெல்லாம் அடியேனின் அறியாமையே காரணம். இந்த அருட்பாக்களே என் மன நிலை.
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
கைகால் புரி தவறும்,
நா காயம் விழை வினையும்,
செவிவிழி மனம் வழி தவறும்,
வரையறு அற்று, ஆற்றும் பணியும்
மன்னித்து ஏற்றருள்வாய்
கருணைக்கடலாம் இறையே !
பாமரனின் வேதாந்தத்தில், இந்த தொடர் பதிவு நிறைவடைந்தது. மீண்டும் உங்களை வலை ஒலித் தொடர் (podcast) வழியாக விரைவில் தீபாவளி நன்நாளில் சந்திக்கின்றேன். அதுவரை